சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் ஆவாரம் பூ முக்கிய பங்கு வகிப்பதாக பலரும் கருதுகின்றனர். இந்நிலையில், ஆவாரம் பூவின் நன்மைகள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் குறித்து மருத்துவர் உஷா நந்தினி தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் தான் ஆவாரம் பூ அதிகமாக பூக்கும். மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் ஏற்படும் வெப்பத்தினால் உருவாகும் நோய்களுக்கு ஆவாரம் பூ மருந்தாக செயல்படுவதாக மருத்துவர் உஷா நந்தினி குறிப்பிடுகிறார்.
அம்மை போன்ற நோய்களுக்கும் ஆவாரம் பூ மருந்தாக செயல்படுவதாகக் கூறும் அவர், காய்ந்து போன ஆவாரம் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்தால், மீண்டும் புதியது போன்று மாறும் தன்மை அதற்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இரத்தத்தில் இருக்கும் இன்சுலின் அளவை அதிகரிக்க ஆவாரம் பூ உதவுவதாக அவர் கூறுகிறார். இதன் மூலம் சர்க்கரை நோய் கட்டுப்படுவதாக கூறப்படுகிறது. இதேபோல், சரும நோய்கள், சிறுநீரக தொற்று போன்றவற்றையும் ஆவாரம் பூ குறைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவாரம் பூவை பயன்படுத்தும் முறை குறித்தும் மருத்துவர் உஷா நந்தினி தெரிவித்துள்ளார். அதன்படி, 5 ஆவாரம் பூக்களை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி குடிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.