தீராத சளி, சைனஸ்... தீர்வுக்கு இந்த ஒரு இலை போதும்: டாக்டர் மைதிலி
திருநீற்றுபச்சிலையில் இருக்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் குறித்து மருத்துவர் மைதிலி விவரித்துள்ளார். இவை சளி, சைனஸ் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.
திருநீற்றுபச்சிலையில் நிறைந்திருக்கக் கூடிய பல்வேறு விதமான பயன்கள் குறித்தும், அவற்றை பயன்படுத்தும் முறை குறித்தும் மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.
Advertisment
வியர்வை துர்நாற்றம் நோயில் இருந்து படிப்படியாக வெளிவருவதற்கு திருநீற்றுபச்சிலை மூலிகை உதவி செய்கிறது என மருத்துவர் மைதிலி கூறுகிறார். இவ்வாறு அதிகமாக வியர்வை வெளியேறுபவர்கள், காலை குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ஒரு பக்கெட் தண்ணீருக்கு இரண்டு கைப்பிடி அளவு திருநீற்றுபச்சிலையை போட்டு ஊற வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 30 நாட்களுக்கு பின்பற்றினால் அதிக வியர்வை வெளியேறும் பிரச்சனையை தீர்க்க முடியும் என அவர் கூறுகிறார்.
இளம் வயதில் இருக்கும் அனைத்து பாலினத்தவருக்கும் முகப்பரு பிரச்சனை இருக்கும். இது போன்ற பிரச்சனைக்கும் திருநீற்றுபச்சிலை மருந்தாக அமைகிறது. அதன்படி, இந்த இலையின் சாறை இரண்டு டீஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் ஒரு சிட்டிகை வசம்பு பொடி சேர்த்து கலக்கி, முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தேய்க்கலாம். இவ்வாறு 2 வாரங்களுக்கு பயன்படுத்தினால், அவை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும் என மருத்துவர் மைதிலி கூறுகிறார்.
சைனஸ் பாதிப்பால் ஏற்படும் தலைபலி, ஒற்றைப் பக்க தலைவலிக்கும் திருநீற்றுபச்சிலையை மருந்தாக பயன்படுத்தலாம். இந்த இலைகளை அரைத்து பசை பதத்திற்கு கொண்டு வந்து, நெற்றியில் பற்று போன்று தடவி வைக்கலாம். இது தலைவலியை குறைக்கும் என்று மருத்துவர் மைதிலி கூறியுள்ளார். வாரத்திற்கு மூன்று முறை என தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் இவ்வாறு செய்ய வேண்டும்.
Advertisment
Advertisements
சளி, இருமல் தொல்லைகளால் பெரும்பாலானோர் அவதிப்படுகின்றனர். அவர்கள், திருநீற்றுபச்சிலையை இரண்டு டீஸ்பூன் சாறாக எடுத்து, அத்துடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து காலை உணவுக்கு முன்பாக குடிக்கலாம். இதேபோல், இரவு உணவுக்கு முன்பாகவும் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து குடித்தால், நுரையீரல் தூய்மையாகி சளி, இருமல் தொல்லைகளை போக்கும் என மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.