உளுந்தே இல்லாமல் உடனடி மெதுவடை..இன்னிக்கே செஞ்சி அசத்துங்க!

டனடி மெதுவடையை தயார் செய்யும் முறையை இங்கு பார்க்கலாம்.

medu vadai instant medu vadai recipe
medu vadai instant medu vadai recipe

Medu vadai, instant medu vadai recipe : உளுந்து வேண்டாம் அரிசி மாவு இருந்தால் போதும் சூப்பரான … பத்தே நிமிடத்தில் உளுந்தே இல்லாமல் உடனடி மெதுவடை

மெதுவடை, அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பலரால் நினைத்த நேரத்தில் மெது வடையை தயார் செய்ய முடிவதில்லை.இந்த உடனடி மெதுவடையை தயார் செய்யும் முறையை இங்கு பார்க்கலாம்.

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சரிசி மாவு – 1 கப் (250 கிராம்), மோர் – 1 கப், உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – 1 கப் ஆகியவற்றை சேருங்கள். அனைத்தையும் சேர்த்து கட்டியில்லாமல் முதலில் கரைத்துக் கொள்ளவேண்டும்.

முதலில் தயிர் ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள். தயிர் புளித்த தயிராக இருக்கக் கூடாது. புளிப்பில்லாத கெட்டியான தயிராக எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அதே கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். தயிர் கட்டிகளில்லாமல் கரையும் படி நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் ஒரு கப் அளவிற்கு அரிசி மாவை சேர்த்துக் கொள்ளுங்கள்.

கைகளில் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள். மாவை உருண்டைகள் பிடித்து வடை போன்று தட்டிக் கொள்ள வேண்டும். நடுவில் ஓட்டை போட்டுக் கொள்ளுங்கள். இப்போது வாணலியில் சூடாக இருக்கும் எண்ணெயில் போட்டு ஒவ்வொன்றாக பொரித்து எடுத்தால் சுவையான அரிசி மெதுவடை தயார். இதற்கு அதிகம் மெனக்கெட வேண்டிய அவசியமில்லை தேவையான பொருட்கள் கையில் இருந்தால் சட்டென மாலை நேரத்தில் எளிமையாக செய்து விடலாம்

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Medu vadai instant medu vadai recipe medu vadai recipe tamil medu vadai video tamil

Next Story
சினிமாவில் ஜெயிக்க வீட்டை விட்டு ஓடி வந்தவர்.. குத் வித் கோமாளி அஸ்வின் சக்சஸ் ஸ்டோரி!ashwin shivangi cook with comali ashwin
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com