உளுந்தே இல்லாமல் உடனடி மெதுவடை..இன்னிக்கே செஞ்சி அசத்துங்க!

டனடி மெதுவடையை தயார் செய்யும் முறையை இங்கு பார்க்கலாம்.

டனடி மெதுவடையை தயார் செய்யும் முறையை இங்கு பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
medu vadai instant medu vadai recipe

medu vadai instant medu vadai recipe

Medu vadai, instant medu vadai recipe : உளுந்து வேண்டாம் அரிசி மாவு இருந்தால் போதும் சூப்பரான ... பத்தே நிமிடத்தில் உளுந்தே இல்லாமல் உடனடி மெதுவடை

Advertisment

மெதுவடை, அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பலரால் நினைத்த நேரத்தில் மெது வடையை தயார் செய்ய முடிவதில்லை.இந்த உடனடி மெதுவடையை தயார் செய்யும் முறையை இங்கு பார்க்கலாம்.

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சரிசி மாவு – 1 கப் (250 கிராம்), மோர் – 1 கப், உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – 1 கப் ஆகியவற்றை சேருங்கள். அனைத்தையும் சேர்த்து கட்டியில்லாமல் முதலில் கரைத்துக் கொள்ளவேண்டும்.

Advertisment
Advertisements

முதலில் தயிர் ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள். தயிர் புளித்த தயிராக இருக்கக் கூடாது. புளிப்பில்லாத கெட்டியான தயிராக எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அதே கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். தயிர் கட்டிகளில்லாமல் கரையும் படி நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் ஒரு கப் அளவிற்கு அரிசி மாவை சேர்த்துக் கொள்ளுங்கள்.

கைகளில் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள். மாவை உருண்டைகள் பிடித்து வடை போன்று தட்டிக் கொள்ள வேண்டும். நடுவில் ஓட்டை போட்டுக் கொள்ளுங்கள். இப்போது வாணலியில் சூடாக இருக்கும் எண்ணெயில் போட்டு ஒவ்வொன்றாக பொரித்து எடுத்தால் சுவையான அரிசி மெதுவடை தயார். இதற்கு அதிகம் மெனக்கெட வேண்டிய அவசியமில்லை தேவையான பொருட்கள் கையில் இருந்தால் சட்டென மாலை நேரத்தில் எளிமையாக செய்து விடலாம்

Food Recipes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: