மெது வடை.. புசு புசு… மொறு மொறு…இதை சேர்த்தால் போதும்!

பருப்பு எவ்வளவு நேரம் ஊறினாலும் பிரச்சனையில்லை.

By: Updated: January 15, 2021, 08:41:50 AM

medu vadai recipes medu vadai tamil : ண்டிகை நாட்களில் கடவுள் வழிபாட்டிற்கு முதலில் மெது வடைதான் வைத்து படைப்பார்கள். இது கடவுளுக்கு மட்டுமல்ல பலருக்கும் மொறு மொறுவென ருசிக்க பிடித்த வடை. எனவே வீட்டில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

உளுந்து – 250 கிராம்,
பச்சை மிளகாய் – 4,
கறிவேப்பிலை – சிறிதளவு,
தேங்காய் எண்ணெய் – 250 கிராம்,
உப்பு – தேவைக்கு,
அரிசி மாவு – 3 மேசைக்கரண்டி.

மெது வடை சூடாக இருக்கும் வரையே மொறு மொறு என இருக்கும். ஆறிப்போனபின் எப்படிச்செய்தாலும் வதக்…தான்…….சிறிது அரிசி மாவை வடைமாவு மீது தூவி …லேசாக கிளறி..சட்டியில் எண்ணை நடுத்தர சூடாக இருக்கும் போது வடையை தட்டி போடுங்கள்…நிதானமாக பொன் நிறமாக வெந்த பின் எடுத்து …மித சூட்டில் இருக்கும்போதே தேங்காய்சட்னி தொட்டு உள்ளே தள்ளுங்கள்.

உளுந்துவடை மொருமொருப்பாக இருக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் அரைமணி நேரத்திற்க்கும் குறைவாக பருப்பை ஊறவைத்தால் போதுமானது. ஆனால் தயிர் வடை சாம்பார் வடை செய்வதானால் பருப்பு எவ்வளவு நேரம் ஊறினாலும் பிரச்சனையில்லை.

ஒரு கோப்பை உளுந்துக்கு ஒரு தேக்கரண்டி பச்சரிசி அல்லது துவரம்பருப்பை சேர்த்து ஊறவைக்கவும். இவைகள் வடையின் மேல்புறத்தை பொருமொருப்பாக அதிக நேரம் வைத்துக் கொள்ளும்.

இரண்டு தேக்கரண்டி உளுந்தம்ப்பருப்பை தனியாக ஊறவைத்துக் கொள்ளவும், இது அரைத்த மாவில் கலப்பதற்கு.இவை மாவு ஒன்றாக ஒட்டாமல் விலகி இருக்க உதவிடும்.

ஊறிய பருப்பை மைய்ய அரைக்காமல் கொஞ்சம் சொரசொரப்பாக அரைக்கவும்,இவ்வாறு அரைப்பதால் வடை ஒரே சீராக வேகும்.

பிறகு அதில் உப்பையும் ஒரு சிட்டிகை சோடாவையும் போட்டு நன்கு கலக்கவும்.சோடா உப்பு போடுவதால் வடை ஆறினாலும் கெட்டியாகாமல் மெதுவாக இருக்கும்.

பிறகு கலக்கிய மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் தனியாக ஊறவைத்துள்ள பருப்பையும் சேர்த்து கலக்கவும்.

கலக்கிய மாவை உள்ளங்கையில் தண்ணீரைத்தடவி தேவையான மாவை உருண்டையாக உருட்டி வைத்து வடையாக தட்டி அதன் நடுவில் துளையிட்டு, தயாராக இருக்கும் சூடான எண்ணெயில் மெதுவாக போட்டவும்.

சட்டியின் அளவிற்க்கு ஏற்ப்ப வடைகளை நல்ல இடைவெளியில் போட்டு அடுப்பை மிதமான சூட்டில் மாற்றவும், ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு இளஞ்சிவப்பாக பொரித்து எடுக்கவும்,

இவ்வாறு ஒவ்வொறு முறையும் அடுப்பை கூட்டியும் குறைத்தும் எண்ணெயின் சூட்டை கட்டுப் படுத்த வேண்டும். இல்லையென்றால் வடை சீக்கிரத்தில் வெந்து விரைவில் சாப்ட்டாகிவிடும். அல்லது அதிக நேரம்மெடுத்து எண்ணெய் நிறைய்ய எடுத்துக் கொள்ளும்.

அதேப்போல் வடைகளைப் பொரிக்கும் பொழுது ஒவ்வொறு முறையும் ஒரே நேரத்தி போட்டு ஒரே நேரத்தில் எடுக்க வேண்டும், இல்லையென்றால் எண்ணெயின் சூடு மாறுபட்டு வடை மொரு மொருப்பு தன்மையை இழந்து கெட்டியாகிவிடும்.

மாவுக் கலவை அதிக நேரம் ஊறாமல் இருப்பது நல்லது இல்லையென்றால் வெங்காயத்திலிருக்கும் நீர் கசிய ஆரம்பித்து வடையின் சுவையை மாற்றிவிடும், ஆகவே அகலமான சட்டியில் வடையின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டால் வேகமாக சுட்டெடுக்கலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Medu vadai recipe medu vadai tamil vadai recipes medu vadai tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X