உலகின் மிக உயரமான போர்களமாக அறியப்படும் சியாச்சின் உச்சியில் பாதுகாப்பு பணியில் பெண் அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை (ஜன.3) முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கேப்டன் சிவா சௌகான்.
Advertisment
இந்திய ராணுவத்தின் சியாச்சின் போர்கள பள்ளியில் ஒருமாத தீவிர பயிற்சிக்கு பிறகு கேப்டன் சிவா சௌகானுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
கேப்டன் சிவா சௌகான் பனி மலை ஏற்றம், பனிச் சரிவில் சிக்கியவர்களை காப்பாற்றுதல், பனிச் சரிவில் இருந்து தப்பிக்கும் முறை உள்ளிட்ட பயிற்சிகளையும் பெற்றுள்ளார். இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பலதரப்பட்ட கடும் பயிற்சிகளில் வெற்றிகரமாக செயல்பட்ட கேப்டன் சிவா சௌகானுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
,
#WATCH | Capt Shiva Chouhan becomes the first woman officer to get operationally deployed at the world's highest battlefield, Siachen, after training at Siachen Battle School along with other personnel.