தோற்றத்தில் தனித்துவம், குணத்தில் விசுவாசம்! கொமன்டோர் நாயின் ஆச்சரியமூட்டும் கதை!

ரெக்கே இசை வீடியோவில் இருந்து நேராக வந்ததோ அல்லது பெரிய மொப் போல நடந்தோ வரும் ஒரு நாயைப் பார்த்தால் ஆச்சரியப்பட வேண்டாம். நீங்கள் ஒரு கொமன்டோரை (Komondor) சந்தித்திருக்கலாம்!

ரெக்கே இசை வீடியோவில் இருந்து நேராக வந்ததோ அல்லது பெரிய மொப் போல நடந்தோ வரும் ஒரு நாயைப் பார்த்தால் ஆச்சரியப்பட வேண்டாம். நீங்கள் ஒரு கொமன்டோரை (Komondor) சந்தித்திருக்கலாம்!

author-image
WebDesk
New Update
Komondor

தோற்றத்தில் தனித்துவம், குணத்தில் விசுவாசம்! கொமன்டோர் நாயின் ஆச்சரியமூட்டும் கதை!

ஹங்கேரியை பூர்வீகமாகக் கொண்ட இந்த தனித்துவமான நாய் இனம், அதன் விசித்திரமான, கயிறு போன்ற உரோமங்களுக்காகவே மிகவும் பிரபலமானது. இவை பார்ப்பதற்கு டெட்லாக்ஸ் (dreadlocks) போலத் தோன்றும். ஆனால், இந்தக் கயிறுகள் ஸ்டைல் அல்ல; அவை உண்மையில் இயற்கை பாதுகாப்பிற்காக உருவானவை. கொமன்டோர்கள் பாரம்பரியமாக கால்நடைகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்டன. அவற்றின் அடர்ந்த உரோமங்கள், கடும் வானிலையிலிருந்தும், வேட்டையாட வரும் விலங்குகளிடமிருந்தும் அவற்றைப் பாதுகாத்தன.

Advertisment

இந்த நாய்களின் தனித்துவமான தோற்றம் ஒரே நாளில் உருவாவதில்லை. கொமன்டோர்கள் மென்மையான, பஞ்சுபோன்ற உரோமங்களுடன் பிறக்கும். அவை வளர வளர 8 முதல் 12 மாதங்களுக்குள் உரோமங்கள் இயற்கையாகவே கயிறுகளாகப் பிரியத் தொடங்கும். இதைப் பார்ப்பது சுவாரசியமாக இருந்தாலும், சற்று சிரமமான பராமரிப்பும் இதற்குத் தேவைப்படும்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

அதன் அடர்ந்த உரோமத் தோற்றம் இருந்தாலும், கொமன்டோர்கள் அமைதியானவை, புத்திசாலித்தனமானவை, நம்பமுடியாத அளவிற்கு விசுவாசமானவை. அவை தங்கள் குடும்பத்தினருடன் மென்மையாகப் பழகும். ஆனால், அந்நியர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருக்கும். இது ஹங்கேரி பண்ணைகளில் அவற்றின் காவல் நாட்களில் இருந்து வந்த குணம் எனலாம்.

இந்த நாய்களுக்குச் சில பராமரிப்புகள் தேவை. கயிறுகள் இயற்கையாக உருவாகும் என்றாலும், அவற்றைப் பராமரிக்காவிட்டால் சிக்கிக்கொள்ளலாம். குளித்த பிறகு அவற்றை உலர்த்துவதற்குப் பெரிய பொறுமை தேவைப்படும். இருப்பினும், கொமன்டோர் உரிமையாளர்கள், அவற்றின் அன்பு, நட்பு மற்றும் அந்நியர்களிடமிருந்து கிடைக்கும் தொடர்ச்சியான பாராட்டுகளுக்காக இந்தச் சிரமங்கள் மதிப்புமிக்கவை என்று உறுதியாகக் கூறுகிறார்கள்.

Advertisment
Advertisements

இதில் ஒரு சிறந்த அம்சம் என்னவென்றால், இந்த நாய்கள் பலமுறை இணையத்தில் வைரலாகியுள்ளன. கொமன்டோர் ஒரு வயலில் ஓடும்போது, அதன் டெட்லாக்ஸ் காற்றினால் மியூசிக் வீடியோவில் நடிப்பதுபோல துள்ளி குதிப்பதைப் பார்க்கும்போது சிரிக்காமல் இருக்க முடியாது. ஆகவே, ராக்ஸ்டார் போல தோற்றமளிக்கும் மற்றும் மென்மையான பாதுகாவலராக செயல்படும் செல்லப்பிராணியை நீங்கள் விரும்பினால், இந்த நாய் உங்களுக்குச் சரியான தேர்வாக இருக்கலாம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: