Meghna Vincent: சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களிடம் ‘தெய்வம் தந்த வீடு’. இந்த சீரியலில் சீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சின்ன திரைக்கு அறிமுகமானவர் நடித்து மேக்னா வின்சென்ட். இதில் பெரும்பாலானா நாட்களில் மேக்னா அழுதுக் கொண்டிருப்பது போன்று தான், இந்த சீரியலின் கதை செல்லும். அப்படி அவர் அழுதுக் கொண்டிருக்கும் படங்கள் நிறைய மீம்ஸாகவும் வெளியாகின.
Advertisment
கணவருடன் மேக்னா வின்செண்ட்
கேரளாவில் பிறந்து வளர்ந்த மேக்னா, தற்போது ‘பொன் மகள் வந்தாள்’ சீரியலில் ரோகிணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் புதுவிதமாக, வயதான பாட்டி தோற்றத்திலும் மேக்னா நடித்துள்ளார். இந்த தோற்றத்தைப் பார்த்து பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார்கள். மலையாளத்தில் ’பரங்கிமலா’ என்ற படத்திலும், தமிழில் ஒரு சில படத்திலும் நடித்துள்ள மேக்னாவுக்கு வெள்ளித்திரை கைக்கொடுக்கவில்லை. அதன் பின்னர் சின்னத்திரையை தேர்வு செய்து, அதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
அதன் படி முன்னணி மலையாள சேனல்களில் பல முக்கியத் தொடர்களில் நடித்து பிரபலமடைந்த மேக்னா, அதன் பின்னர் தமிழில் தெய்வம் தந்த வீடு என்ற தொடரின் மூலம் மக்களிடையே பெரிய அளவு பிரபலமானார். இந்த சீரியல் முடிந்ததும், அதே விஜய் டிவியில் “பொன் மகள் வந்தாள்” என்ற தொடரில் நடித்து வருகிறார்.
Advertisment
Advertisements
2017-ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் டோனி என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேக்னா. இவருக்கு கை வேலைப்பாடுகளில் ஆர்வம் அதிகமாம். படபிடிப்பு இல்லாத நாட்களில் கிராஃப்ட்ஸ் செய்வதும், சாப்பிடுவதும் மேக்னாவுக்கு பிடித்தமானவைகளாம். உணவு என்றதுமே தென்னிந்திய உணவுகளும், ரஜஸ்தானி உணவுகளும் இவருக்குப் பிடித்தமானவைகளாம்.