அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோர் ராஷ்டிரபதி பவனுக்கான விஜயத்துடன் இந்தியாவில் தங்களது இரண்டாவது நாள் பயணத்தை இன்று தொடங்கினர். அங்கு அவர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்தை சந்தித்தனர்.
(Source: Reuters)
முதல் நாள் போலவே, அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா மீண்டும் ஒரு வெள்ளை நிற உடையை தேர்வு செய்தார். பூக்கள் அச்சிடப்பட்ட மேக்ஸி உடை அணிந்து வந்தார். இடையில் ஒரு சிவப்பு பெல்ட் மற்றும் ஒரு ஜோடி வெள்ளை ஸ்டெலோட்டோஸ் (காலனி) அணிந்திருந்தார்.
Source - PTI
இவான்கா டிரம்பும் ஒரு வெள்ளை நிற பாரம்பரிய வெள்ளை பந்த்கலா உடையில் அழகாகத் தெரிந்தார். அவரது கண் அலங்காரம் அவரை மேலும் அழகாக்கியது.
(Source: AP Photo)
முன்னதாக, அமெரிக்க முதல் பெண்மணி அகமதாபாத்திற்கு வந்தபோது, வடிவமைப்பாளர் ஹெர்வ் பியர் கைவண்ணத்தில் ஒரு முழு கை ஜம்ப்சூட்டில் நேர்த்தியாகத் தெரிந்தார்.
அவரது இடையில் கட்டப்பட்டிருந்த தங்க மெட்டாலிக் நூல் வேலைபாடுகளுடன் கூடிய பச்சை பட்டு கவசம் தோற்றதை மேலும் உயர்த்தியது.
அதேபோல், மலர் அச்சிடப்பட்ட நீல நிற உடையில் இவான்கா காணப்பட்டார். இதில், ஒரு குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவெனில், இதே நீல நிற உடையை அவர் இதற்கு அர்ஜென்டினா போன போதும் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil "