Melania Trump Costume controversy America Election 2020 Tamil News: ட்ரம்ப்பின் சொந்த மாநிலமான ஃப்ளோரிடா பாம் பீச்சில் இருந்த வாக்கெடுப்பு நிலையத்திற்கு, 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்க அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் வந்திருந்தார். அப்போது ‘க்ளிக்’ செய்யப்பட்ட அவருடைய பல புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
உலகின் முதன்மை ஃபேஷன் பிராண்டுகளில் ஒன்றான ‘குச்சியின் (Gucci)’ முழங்கால் வரை நீண்டிருக்கும் வெள்ளை நிற ஆடையில் மிளிர்ந்தார் மெலனியா. சங்கிலி ப்ரின்ட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த ஸ்லீவ்லெஸ் பட்டு உடை, முன்பக்கத்தில் அழகிய ஃப்ளீட்களைக் கொண்டிருந்தது. இந்த எளிய உடையை, ‘நியூட்’ வண்ண Christian Louboutin காலனி மற்றும் tortoiseshell கண்ணாடியுடன் பக்காவாக இணைத்திருந்தார்.

அமெரிக்காவின் முதல் பெண்மணி தனது இந்த மிடுக்கான தோற்றத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக கேன்வாஸ் மற்றும் லெதர் ஹெர்ம்ஸ் கெல்லி ஹாண்ட்பேக் மற்றும் ஏற்றி கட்டப்பட்ட ‘பண்’ ஹேர்ஸ்டைல் இருந்தது. இருப்பினும், இந்த கொரோனா காலகட்டத்தில் அமெரிக்காவின் முதல் பெண்மணி ‘மாஸ்க்’ இல்லாமல் இருந்தது பல இடத்திலும் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
மெலனியா அணிந்திருந்த இந்த அழகிய உடையின் விலை 4,500 அமெரிக்க டாலர் (ரூ.3,36,555). 50 வயதான மெலனியா, அத்தகைய விலையுயர்ந்த ஆடை அணிந்ததற்காக நெட்டிசன்கள் பலரும் அவதூறாகப் பேசி வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்காக:
#MelaniaTrump voted dressed with heavily branded #Gucci & #Hermes gear.#AmericaFirst? Not for the #FirstLady.#ElectionDay #2020Elections
— Stephane MOT (@stephanemot) November 4, 2020
First Lady Melania Trump has cast her ballot in Florida, rocking a $4,500 Gucci dress. She was the only one at the polling place not to wear a mask. ????: AFP https://t.co/vPIzr08Zol pic.twitter.com/BwGV3Wc8z3
— news.com.au (@newscomauHQ) November 3, 2020
Is this dress covered in alarm bells? Is she warning us?!?!? #AmericaDecides2020 #MelaniaTrump #2020Elections pic.twitter.com/Undv3KJEpX
— Nanda Jarosz (@NandaJarosz) November 4, 2020