ஜேசுதாஸ் குடும்பத்தின் நான்காவது தலைமுறையும் இசை விருந்து அளிக்க தயாராகி விட்டார். ஜேசுதாசின் பேத்தியும், விஜய் ஜேசுதாவின் மகளுமான அமேதாவும் பாடகி ஆகிவிட்டார்.
ஜேசுதாஸ் பேத்தி:
மலையாளம் , தமிழ் இரண்டிலும் ஜேசுதாஸ் குடும்பம் ரசிகர்களுக்கு இசை விருந்தை அளித்து வந்தது. இந்நிலையில், அவர்கள் குடும்பத்தின் நான்காவது தலைமுறையான அமேதா, தாத்தாவுட இணைந்து பாடியுள்ளார்.
இசையமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி, கடந்த 2013 ஆம் ஆண்டு மரண மடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அமேதாவை தனது இசையில் பாட வைத்துள்ளார். சென்னையில் அந்த பாடல் பதிவு செய்யப்பட்டபோது அமேதாவுக்கு நான்கு வயது. பேத்தியுடன் சேர்ந்து தாத்தாவான கே.ஜே.ஜேசுதாசும் பாடியிருப்பது கூடுதல் சிறப்பு.
/tamil-ie/media/media_files/uploads/2018/10/h4-4-1024x576.jpg)
மலையமாருத ராகத்தில் ‘ராமா ரவிகுல ஸோமா..’ என்று தொடங்கும் கீர்த்தனையை அமேதா பாடியிருக்கிறாள். இன்னொரு ராகத்தில் அமைந்த பாடலை குருவாகவும், சீடராகவும் இருந்து இரு குரலில் ஜேசுதாஸ் பாடியிருக்கிறார்.