scorecardresearch

கோவையில் களைகட்டிய பொங்கல் விழா.. நடனம் ஆடிய மாமன்ற உறுப்பினர்கள்!

இந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் கோலப்போட்டி, உரியடித்தல், சமையல் போட்டி, பொங்கல் பானை அலங்கரித்தல், இசை நாற்காலி, கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

Members dance at Pongal Festival in Coimbatore
கோவை பொங்கல் விழாவில் மாமன்ற உறுப்பினர்கள் நடனம் ஆடினர்.

கோவை மாநகராட்சி சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் பெண் மாமன்ற உறுப்பினர்கள் நடனமாடி மகிழ்ந்தனர்.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை (ஜன.19) கொண்டாடப்படுகிறது.

மதியம் தொடங்கிய இந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் கோலப்போட்டி, உரியடித்தல், சமையல் போட்டி, பொங்கல் பானை அலங்கரித்தல், இசை நாற்காலி, கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதனால் கோவை மாநகராட்சி அலுவலகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இதில் மாநகராட்சி அலுவலர்கள் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலர்கள் புத்தாடை அணிந்து பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இதனிடையே பெண் மாமன்ற உறுப்பினர்கள் கிராமிய சினிமா பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ந்தனர். இது அங்குள்ள அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

செய்தியாளர் பி. ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Members dance at pongal festival in coimbatore