இது என்னடா ப்ளேசருக்கு வந்த சோதனை! ப்ளேசர்கள் பற்றி தெரியுமா?

Men crop top cut off blazers types of blazers Tamil news இந்த காலகட்டத்தில் நம் ஒருமைப்பாடு உலகத்தைப் பற்றிய கருத்தை மாற்றியமைத்துள்ளது.

Men crop top cut off blazers types of blazers Tamil news
Men crop top cut off blazers types of blazers Tamil news

Men crop top cut off blazers types of blazers Tamil news : பெண்கள் மட்டும்தான் ஆண்களுக்கென டிசைன் செய்யப்படும் பேன்ட், சட்டைகளை எல்லாம் போடுவார்களா? நாங்களும் அவர்களுடைய டிசைன்களை உபயோகிப்போம் என்கிற வகையில் சமீபத்தில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ நிகழ்வு காட்டியிருக்கிறது. சமீபத்தில் இந்த ஆண்டின் ஆண்களுக்கான மிலன் ஃபேஷன் ஷோ விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில் பங்குபெற்ற ஃபெண்டி ப்ராண்ட், ஆண்களுக்கான வித்தியாசமான ஆடையை அறிமுகம் செய்தது.

பிரபல ஆண்கள் ஆடை வடிவமைப்பாளரான சில்வியா வென்சுரினி ஃபெண்டி, வெளிர் நிற பிளேஸர்கள் மார்புக்குக் கீழே இருக்கும் அளவிற்கு டிசைன் செய்திருந்தார். மேலும், அவை தளர்வான பேன்ட்ஸுடன் மேட்ச் செய்யப்பட்டிருந்தன. ‘இதுக்கு எதுக்கு ப்ளேசர் போட்டுக்கிட்டு’ என்கிற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. ஆனால், அதற்கான காரணத்தை விளக்குகிறார் இந்த ஆடைகளை வடிவமைத்த ஆடை வடிவமைப்பாளர் ஃபெண்டி.

“இந்த காலகட்டத்தில் நம் ஒருமைப்பாடு, உலகத்தைப் பற்றிய கருத்தை மாற்றியமைத்துள்ளது. வண்ணங்களும் நம் பார்வைகளும் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். இந்த தொகுப்பு அதற்கு, மையப் புள்ளியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்” என்று வடிவமைப்பாளர் கூறினார்.

இனி ப்ளேசர்களின் வகைகளைப் பற்றிப் பார்ப்போம்..

டைலர் ப்ளேசர்

ஃபார்மல் ஜாக்கெட்டுகளுக்கான மாற்றுதான் டைலர் பிளேஸர்கள். கம்பளி, கார்டுராய் போன்ற துணி வகைகளில் ப்ளேசர்கள் வடிவமைக்கப்படுகின்றன. உங்கள் சாதாரண உடையுடன் இந்த செட் அப் டெய்லர்டு ஜாக்கெட் போன்ற எளிதில் வடிவமைக்கப்பட்ட ஜாக்கெட்டுகளை நீங்கள் அணியலாம் என்றாலும், அவற்றை டீ-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் பேன்ட்டுடன் இணைத்தால் நிச்சயம் மிடுக்கான தோற்றம் தரும்.

கம்பளி ப்ளெண்ட டைலர் ஜாக்கெட் (Woolen Blend)

இந்த வகையான ஜாக்கெட்டுகள் பிரீமியம் தரமானவை. கம்பளியிலிருந்து தயாரிக்கப்படும் இந்த ஜாக்கெட் கிளாசிக் தோற்றத்தைத் தருகிறது. நவீன மற்றும் அதிநவீன டிசைன்களுடன் உங்களுக்கு ஸ்டைலிஷ் தோற்றம் தரும். இந்த வகையான ஜாக்கெட்டை ஃபார்மல் உடை அல்லது சாதாரண பணிக்கு உடுத்திச்செல்லும் உடைகளோடு மேட்ச் செய்யலாம்.

கம்ஃபோர்ட் ப்ளேசர்

வெவ்வேறு பிளேஸர்கள் வெவ்வேறு நிகழ்வுகளுக்குப் பொருந்தும். விடுமுறை அல்லது அதிகாலை நடைப்பயணங்கள் அல்லது இரவு உணவிற்கு, வணிக சந்திப்புக்கு சாதாரண அல்லது கம்ஃபோர்ட் ப்ளேசர்கள் சிறந்தவை. இவை பல வண்ணங்களில் வருகின்றன. உங்கள் கேஷுவல் சட்டைகள் அல்லது டீ-ஷர்ட்களுடன் மேட்ச் செய்து உடுத்தலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Men crop top cut off blazers types of blazers tamil news

Next Story
இது வெடிக்கிற திரியா ..? டிரைலர் எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express