சானிட்டரி நாப்கின்கள் நீண்ட காலமாக மாதவிடாய் காலத்திற்கான தீர்வாக இருந்தபோதிலும், ,மென்ஸ்ட்ருவல் கப் தற்போது செலவு குறைந்த, நிலையான மற்றும் அதிக சுகாதாரமான மாற்று வழிகளை விரும்பும் பெண்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன. ஆனால் முக்கிய கேள்வி என்னவென்றால், மென்ஸ்ட்ருவல் கப் பேட்களை விட அதிக சுகாதாரமானதா, மேலும் அவை அனைவருக்கும் பொருத்தமானதா என்பதுதான்.
மென்ஸ்ட்ருவல் கப் என்றால் என்ன?
இது மெடிக்கல் கிரேட் எலாஸ்டோமர், சிலிகான் அல்லது ரப்பரால் ஆன மணி வடிவ சாதனமாகும். மாதவிடாய் காலத்தில் இரத்தத்தைச் சேகரிக்க யோனிக்குள் செருகப்படுகிறது. இது நெகிழ்வானதாக இருப்பதால், இரத்தத்தை வெறுமனே சேகரித்து வைத்துக்கொள்ளும்.
நாப்கின்கள் மற்றும் டாம்பூன்களை மீண்டும் பயன்படுத்த முடியாது. ஆனால் மென்ஸ்ட்ருவல் கப் காலி செய்து, சுத்தம் செய்து மீண்டும் செருகலாம்.
சானிட்டரி நாப்கின்களை விட அதிக சுகாதாரமானதா?
சுகாதாரத்தைப் பொறுத்தவரை, மென்ஸ்ட்ருவல் கப் முறையாகப் பயன்படுத்தப்பட்டு சுத்தம் செய்யப்பட்டால், சானிட்டரி பேட்களை விட அதிக சுகாதாரமானதாக இருக்கும், இதற்குக் காரணம்:
பாக்டீரியா வளர்ச்சி ஆபத்து குறைவு
பேட்கள் காற்று மற்றும் ஈரப்பதத்திற்கு ஆளாகின்றன, இதனால் சில நேரம் (நான்கு மணி நேரத்திற்கும் மேலாக) மாற்றப்படாமல் இருந்தால் பாக்டீரியாக்களின் இனப்பெருக்க மையமாக மாறும். இதற்கு மாறாக, மென்ஸ்ட்ருவல் கப் இரத்தத்தை ஒரு சீல் செய்யப்பட்ட சூழலில் சேகரிக்கின்றன, இது வெளிப்புற அசுத்தங்களுக்கு ஆளாகுவதை வெகுவாகக் குறைக்கிறது.
தோல் தொடர்பு இல்லை
நீண்ட நேரம் பயன்படுத்தப்படும் பேட்கள் தோல் எரிச்சல், தடிப்புகள் அல்லது குறிப்பாக வெப்பமான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைகளில் தொற்றுநோய்க்கு கூட வழிவகுக்கும். மாதவிடாய் கோப்பைகளை ஒவ்வொரு ஆறு முதல் 12 மணி நேரத்திற்கும் ஒருமுறை காலி செய்யலாம், இதனால் அத்தகைய சிக்கல்கள் தவிர்க்கப்படுகின்றன.
ரசாயனங்கள் அற்றவை
மருத்துவ தரப் பொருட்களால் வடிவமைக்கப்பட்ட மென்ஸ்ட்ருவல் கப், ஒவ்வாமை அல்லது தொற்றுகளை ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்கள் அல்லது சாயங்கள் அற்றவை.
சுற்றுச்சூழல் நட்பு
/indian-express-tamil/media/media_files/2025/03/03/period-cup-708973.jpg)
திறம்பட (சுத்தமாகவும் சுகாதாரமாகவும்) பயன்படுத்தினால் மென்ஸ்ட்ருவல் கப், பல ஆண்டுகள் எந்தவிதமான அப்புறப்படுத்தும் தொந்தரவும் இல்லாமல் நீடிக்கும்.
யார் மென்ஸ்ட்ருவல் கப் பயன்படுத்த வேண்டும்?
மிதமான முதல் அதிக இரத்தப்போக்கு உள்ளவர்கள், பேட்களால் தோல் ஒவ்வாமைக்கு ஆளாகக்கூடியவர்கள், மற்றும் விளையாட்டு வீரர்கள், நீச்சல் வீரர்கள் போன்றவர்களுக்கு மென்ஸ்ட்ருவல் கப் மிகவும் பொருத்தமானவை. உண்மையில், அவை பேட்களை விட அதிக திரவத்தை வைத்திருக்க முடியும், கசிவு அபாயத்தைக் குறைக்கும்.
ஆனால் இளம் பருவப் பெண்கள் அல்லது கன்னித்தன்மை கொண்டவர்கள், கருப்பை வாய் தாழ்வாக இருத்தல் அல்லது கருப்பை சரிவு (கருப்பை அதன் இயல்பான நிலையில் இருந்து கீழ் இறங்குதல்) போன்ற மருத்துவ நிலைகள் உள்ளவர்கள், மற்றும் யோனி வறட்சியை அனுபவிக்கும் பெண்கள் (மெனோபாஸ் முன்) மென்ஸ்ட்ருவல் கப் பயன்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமாக இருக்காது.
பாதகங்கள் என்ன?
சுத்தமான நீர் மற்றும் சுகாதாரமான கழிவறை வசதிகளை அணுகக்கூடியவர்களுக்கு மென்ஸ்ட்ருவல் கப் ஏற்றவை. பயன்படுத்துபவர் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முறை உள்ளது. சில ஆய்வுகள் பல்வேறு காரணங்களால் கசிவு ஏற்படுவதைக் காட்டுகின்றன, அவற்றுள் அசாதாரணமாக அதிக இரத்தப்போக்கு, கருப்பையின் தனித்துவமான அமைப்பு, மிகச் சிறிய கோப்பையைப் பயன்படுத்துதல், கோப்பையை தவறாக வைப்பது அல்லது சரியான நேரத்தில் காலி செய்யாதது ஆகியவை அடங்கும்.
Read in English: Menstrual cups vs sanitary pads: Which is more hygienic and who should use them?