ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சிக்கும், அந்த நேரத்தில் அவர் எடுத்துக் கொள்ளும் உணவுக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது…
Advertisment
எப்படி தெரியுமா?
இது தொடர்பாக DW Tamil யூடியூப் சேனலில் வெளியான வீடியோ
ஒரு பெண் கருத்தரிப்பதற்கு ஏதுவாக அவரது உடலில் ஏற்படும் சுழற்சியானது, 30 நாட்களில் 4 முக்கியமான கட்டங்களை கடந்து செல்கிறது. இதில் ஒவ்வொரு கட்டத்துக்கும் நன்மை பயக்கும் ஊட்டச்சத்துகள் வேறுபடுகின்றன.
இதில் மிக முக்கியமான ஊட்டச்சத்து இரும்பு.. இறைச்சியில், எளிதில் கிடைக்கக் கூடிய இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது..
ஒருவேளை நீங்கள் தாவர அடிப்படையிலான உணவுகளை விரும்பினால் எள், முந்திரி, பிஸ்தா சாப்பிடலாம். அதேபோல மருத்துவர்கள் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிட பரிந்துரைக்கின்றனர்…
ஏனெனில் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை இவை மேம்படுத்தும்…
ஒரு ஆய்வறிக்கையின் படி மெக்னீசியம், வயிற்று தசை பிடிப்பை குறைக்க உதவுகிறது. இது ஆளி மற்றும் பூசணி விதைகளில் காணப்படுகிறது. இவற்றில் துத்தநாகமும் உள்ளது.
இது மட்டுமல்லாமல் உங்களை மகிழ்ச்சிப்படுத்தக் கூடிய மற்றொரு உணவும் இருக்கிறது.
அதுதான் சாக்லேட். அதிக கோகோ கொண்ட சாக்லேட் மெக்னீசியம் அதிகம் உள்ள உணவுப் பொருளாகும்.
இந்த உணவுகள் தான் சுழற்சியின் முதல் கட்டத்துக்கு உதவுகின்றன.
அடுத்து 2வது கட்டம் கருமுட்டை வளரும் Follicular phase. கர்ப்பம் அடைவதற்கு ஏதுவான ஹார்மோன்களின் அளவு இந்த சமயத்தில் உயரும். இந்த நேரத்தில் குடல் பகுதிக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
குறிப்பாக உப்பில் ஊறவைத்த முட்டைக்கோஸ், சிறுநீர்ப்பை தொற்றை தடுக்க உதவும். இந்த கட்டத்தில் உடலின் ஆற்றலுக்கு புரதங்களும் தேவை…
3வது, முட்டை வெளியேறும் ovulation கட்டம். இந்த நேரத்தில் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் கால்சியம் இரண்டிலிருந்தும் உடலுக்கு ஆற்றல் தேவை.
சுழற்சியின் 4வது கட்டம் (luteal) அதாவது மாதவிடாய் தொடங்குவதற்கு முன், இந்த நேரத்தில் பல பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம். பொதுவாக தலைவலி, மனநிலையில் மாற்றங்கள், மார்பகம், வயிற்று பகுதியில் வலி ஆகியவை ஏற்படுவது இயல்புதான்…
இவற்றை எதிர்கொள்ள விட்டமின் பி, மெக்னீசியம், ஒமேகா 3 ஆகிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. இந்த நேரத்தில் என்ன தேவை என்பதை உங்களது உடலை சொல்லிவிடும். ஆனாலும் சில உணவுகள் மற்றும் பானங்கள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.
கண்டிப்பாக மாதவிடாய் காலத்தில் காஃபி, பதப்படுத்தப்பட்ட சர்க்கரை மற்றும் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
மாதவிடாய் சுழற்சியின் வெவ்வேறு கட்டங்களில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு உங்கள் உடலுக்கு எப்படியெல்லாம் உதவுகிறது என்பது இப்போது புரிகிறதா?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“