மாதவிடாய் என்பது எந்தவொரு பெண்ணுக்கும் வலிமிகுந்த கட்டமாகும், ஏனெனில் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் காரணமாக உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
Advertisment
பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் சுழற்சியின் போது பிடிப்புகள், முதுகுவலி, மனநிலை மாற்றங்கள், குமட்டல் மற்றும் பிற ஒத்த நிலைமைகளை அனுபவிக்கின்றனர். மாதவிடாய் காலத்தில் உண்டாகும் தீராத வயிற்று வலியினால் அவதிப்படுபவர்கள் இந்தக் கசாயத்தைக் குடித்து வந்தால் வயிற்று வலி உடனடியாக குணமாகும்.
தேவையான பொருட்கள்
சோம்பு - 3 தேக்கரண்டி,
நெய் - அரை ஸ்பூன்,
பனங்கற்கண்டு - சிறிதளவு
எப்படி செய்வது?
சோம்பு, வயிற்றின் அமிலத்தன்மையை நடுநிலையாக்க உதவுகிறது, இது முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை மற்றும் எடை காரணமாக சில நேரங்களில் அதிகரிக்கும்.
அடுப்பில் கடாய் வைத்து, அதில் சோம்பு சேர்த்து லேசாகக் கருக ஆரம்பிக்கும் வரை வறுக்க வேண்டும். கொஞ்சம் வறுத்ததும் அதில் மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.
நீர் நன்றாகக் கொதித்து அது முக்கால் டம்ளர் வந்ததும் அதனை வடிகட்டவும். இந்த சோம்புத்தண்ணீரில் அரை ஸ்பூன் நெய், தேவைப்பட்டால் பனங்கற்கண்டு சேர்த்து மிதமான சூட்டில் குடிக்கவும்.
அதேபோல், சோம்பு, மாவிலங்கப்பட்டை, மிளகு இவை மூன்றையும் சம அளவு எடுத்து கஷாயமாகக் காய்ச்சி தினமும் 100 மி.லி அளவுக்கு காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மாதவிலக்கு கோளாறுகள் சரியாகும்
மேலும் சோம்பை லேசாக வறுத்து பொடித்து, வேளையொன்றுக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது பனங்கற்கண்டு கலந்தோ சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகும்.
சோம்பு, அசோகப்பட்டை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் கருப்பை சார்ந்த நோய்கள் குணமாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“