பெண்களைப் பொறுத்தவரை, தோல் என்பது ஒரு பாதுகாப்புத் தடையை விட அதிகம், இது உடலின் உள் நிலையை பிரதிபலிக்கிறது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற தோல் மருத்துவர் நிஷிதா ரங்கா, தோல் மற்றும் மாதவிடாய் சுழற்சிக்கு இடையிலான இந்த சிக்கலான தொடர்பை வலியுறுத்தினார். (Medical Director & Founder of Dr Nishita’s Clinic for Skin, Hair & Aesthetics)
ஹார்மோன் அளவுகள், குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகியவற்றின் ஏற்ற இறக்கம் காரணமாக, மாதவிடாய் சுழற்சியானது சருமத்தை கணிசமாக பாதிக்கிறது. இந்த ஹார்மோன் மாற்றங்கள், தோலில் அவற்றின் தாக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வது, மாதம் முழுவதும் அவர்களின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் தோல் பராமரிப்பு வழக்கத்தை உருவாக்க பெண்களுக்கு உதவலாம், என்று டாக்டர் ரங்கா விளக்கினார்.
மாதவிடாய் சுழற்சியை நான்கு கட்டங்களாகப் பிரிக்கலாம், ஒவ்வொன்றும் தனித்துவமான ஹார்மோன் செயல்பாடு மற்றும் தோலில் அதன் பின் ஏற்படும் தாக்கத்தால் வகைப்படுத்தப்படுகிறது.
1. ஃபோலிகுலர் கட்டம் (நாள் 1-13) (follicular phase)
இந்த கட்டம், மாதவிடாயின் முதல் நாளிலிருந்து தொடங்கி, ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் படிப்படியான உயர்வைக் காண்கிறது. ஈஸ்ட்ரோஜன் ஆனது கொலாஜன், எலாஸ்டின் மற்றும் ஹைலூரோனிக் அமிலத்தின் உற்பத்தியைத் தூண்டுகிறது, இவை அனைத்தும் சருமத்தின் நீரேற்றம், நெகிழ்ச்சி மற்றும் கட்டமைப்பை பராமரிக்க அவசியம்.
ஃபோலிகுலர் கட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள்
முந்தைய சுழற்சியின் ஆரம்ப டிரைனெஸ்க்கு அப்பால், ஃபோலிகுலர் கட்டத்தின் ஆரம்பம் டைட்னெஸ் மற்றும் லேசான மெல்லிய தன்மையைக் கொண்டுவரும். ஈஸ்ட்ரோஜன் அளவு உயரும் போது, தோல் மேலும் நீரேற்றமாகிறது, மேலும் அதன் டெக்ஸ்ட்சர் மேம்படுகிறது.
சரும பராமரிப்பு
இந்த கட்டத்தில் ஈரப்பதத்தை ஈர்க்கவும் தக்கவைக்கவும் ஹைலூரோனிக் ஆசிட் சார்ந்த தயாரிப்புகளைப் பயன்படுத்தவும்.
சருமத்தின் இயற்கையான எண்ணெய்களை அகற்றாத மென்மையான க்ளென்சர் தேர்ந்தெடுக்கவும்.
தோல் தடையை வலுப்படுத்த மற்றும் சென்சிட்டிவிட்டி குறைக்க செராமைடு மற்றும் நியாசினமைடு தோல் பராமர்ப்பு வழக்கத்தில் இணைக்கவும்.
முட்டை வெளியேறும் ovulation கட்டம் (நாள் 14-16)
முட்டை வெளியேறும் ovulation கட்டம், ஈஸ்ட்ரோஜன் அளவுகளின் உச்சத்தை குறிக்கிறது, இந்த நேரத்தில் கொலாஜன் உற்பத்தி மற்றும் மேம்பட்ட ரத்த ஓட்டம் காரணமாக சருமம் மிகவும் பிரகாசமாக இருக்கும். ஈஸ்ட்ரோஜன் சருமத்தின் தடுப்பு செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது, எரிச்சல் மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது.
சரும பராமரிப்பில் செய்ய வேண்டியவை
/indian-express-tamil/media/media_files/GvId1HdEaSVxEv6sJQOU.jpg)
வைட்டமின் சி சருமத்தை பிரகாசமாக்குகிறது மற்றும் ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்பை வழங்குகிறது, அதே நேரத்தில் ஹைலூரோனிக் ஆசிட் நீரேற்றத்தை பராமரிக்கிறது. ரெட்டினாய்டு புதிய செல் வளர்ச்சியை தூண்டுகின்றன, சருமத்தின் டெக்ஸ்ட்சர் மற்றும் டோனை மேம்படுத்துகின்றன.
மென்மையான எக்ஸ்ஃபாலியேஷன் இறந்த சரும செல்களை நீக்குகிறது, மேலும் ஹைட்ரேடிங் ஃபேஸ் மாஸ்க்ஸ், பளபளப்பை மேலும் அதிகரிக்கும். புற ஊதா கதிர்வீச்சு சேதம் மற்றும் முன்கூட்டிய முதுமை ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்கு சன்ஸ்கிரீன் முக்கியமானது.
லூட்டல் கட்டத்தில் (நாள் 17-24) முகப்பரு தடுக்க
ஒவல்யூஷன் பின்னர், புரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகரித்து, சீபம் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கிறது. இது எண்ணெய் சருமம் மற்றும் அடைபட்ட துளைகளுக்கு வழிவகுக்கும், இதன் விளைவாக முகப்பரு வரலாம். சருமத்தில் எரிச்சல் மற்றும் மந்தமான தன்மைக்கு அதிக வாய்ப்புள்ளது.
மாதவிடாய்க்கு முந்தைய முகப்பரு வராமல் தடுக்க
திறம்பட எண்ணெய் குறைக்க மற்றும் முகப்பரு வராமல் தடுக்க சாலிசிலிக் ஆசிட், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் பென்சாயில் பெராக்சைடு பயன்படுத்தலாம்.
டீ ட்ரீ ஆயில், இயற்கை ஆண்டிசெப்டிக் பண்புகளை வழங்குகிறது. பால் மற்றும் சர்க்கரை உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள், ஏனெனில் இவை முகப்பருவை அதிகரிக்கலாம். யோகா மற்றும் தியானம் போன்ற நடவடிக்கைகள் கார்டிசோலின் அளவைக் குறைக்கலாம், இது முகப்பருவுக்கு பங்களிக்கிறது.
மாதவிடாய் (menstrual) கட்டத்தில் வறட்சி
மாதவிடாயின் போது சருமம் சற்று கருமையாக இருப்பது கவலைக்குரியது அல்ல, இதை சரியான கவனிப்புடன் சரிசெய்யலாம்.
பரிந்துரைக்கப்பட்ட பிரொடக்ட்ஸ்/ ட்ரீட்மென்ட்
வறட்சியை எதிர்த்துப் போராட ஷியா பட்டர் மற்றும் கிளிசரின் நிறைந்த மாய்ஸ்சரைசர், ஈவன் ஸ்கின் டோன்க்கு நியாசினமைடு அல்லது licorice எக்ஸ்ட்ராக்ட் உள்ள பிரைட்னெஸ் சீரம், ஈரப்பதத்தை மீட்டெடுக்க ஹைட்ரேடிங் ஃபேஸ் மாஸ்க்ஸ் பயன்படுத்தலாம்.
ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்திற்கு போதுமான தூக்கம் மற்றும் தண்ணீர் உட்கொள்ளலுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் மற்றும் தோலில் அவற்றின் தாக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதன் மூலம், பெண்கள் தங்கள் தேவைகளை நிவர்த்தி செய்யும் தோல் பராமரிப்பு வழக்கத்தை உருவாக்கலாம். இந்த ஆற்றல்மிக்க அணுகுமுறை மாதம் முழுவதும் ஆரோக்கியமான, பொலிவான சருமத்தை உறுதி செய்கிறது.
Read in English: How does your menstrual cycle affect your skin? We asked a dermatologist
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“