மன நலம்: தொற்றுநோய்க் காலத்தில் அன்புக்குரியவரின் இழப்பை எப்படி கையாள்வது?
மன நலம் குணப்படுத்துவது என்பது படிப்படியான செயல்; பெரும்பாலான மக்கள் அதை அவசரமாக செய்ய முயற்சிக்கிறார்கள். துக்கப்படுவதற்கு உங்களுக்கு நீங்களே நேரம் கொடுங்கள் என்று ஒரு நிபுணர் கூறுகிறார்.
மன நலம் குணப்படுத்துவது என்பது படிப்படியான செயல்; பெரும்பாலான மக்கள் அதை அவசரமாக செய்ய முயற்சிக்கிறார்கள். துக்கப்படுவதற்கு உங்களுக்கு நீங்களே நேரம் கொடுங்கள் என்று ஒரு நிபுணர் கூறுகிறார்.
கடந்த ஒரு ஆண்டில் அன்பானவரின் இழப்பால் பல குடும்பங்கள் துயரப்படுவதை நாம் கண்டிருக்கிறோம். மரணம் தவிர்க்க முடியாதது, ஆனால் அதை ஏற்றுக்கொள்வது கடினம்.
Advertisment
தற்போதைய சூழ்நிலையில், அன்புக்குரியவர்களிடம் போய் வருகிறேன் என்று சொல்ல முடியவில்லை. அதனால், ஏற்படும் குற்ற உணர்ச்சி, அல்லது அவர்களுக்காக அதிகம் செய்ய இயலாம எல்லாமே தீர்க்க முடியாதது. அன்பானவரின் இழப்பிலிருந்து மீள உதவும் சில வழிகள் இங்கே உள்ளன. இது அமைதிநிறந்த ஆன்மா அமைப்பின் நிறுவனரும் அமைதி நிறைந்த மனதின் ஆசிரியருமான சிதேந்தர் செஹ்ராவத் கூறுகிறார்.
உங்கள் குற்ற உணர்ச்சியை உரிதாக்குங்கள்
நீங்கள் என்ன செய்ய முடியுமோ அவ்வளவுதான் செய்தீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். “விளைவுக்காக உங்களை நீங்களே குற்றம் சாட்ட முயற்சிப்பது உங்கள் நிலைமையை மோசமாக்கும். உங்களால் ஏதாவது செய்ய முடிந்திருக்கலாம், ஆனால், செய்ய முடியவில்லை என்றால் நீங்கள் தயவுசெய்து அன்பாக நடந்து கொள்ளுங்கள்” என்று செஹ்ராவத் கூறினார்.
Advertisment
Advertisements
துரதிர்ஷ்டவசமான நிகழ்வை ஏற்றுக்கொள்ளுங்கள்
நம்முடையய் வாழ்நாள் முழுவதும், விரும்பத்தகாத உணர்ச்சிகளைத் தவிர்ப்பதற்கு கற்பிக்கப்பட்டுள்ளோம். மனச்சோர்வடைந்தால், ஒரு திரைப்படத்தைப் பார்க்கவோ, நண்பர்களுடன் வெளியே செல்லவோ அல்லது அதற்கு நேர்மாறாக ஏதாவது செய்யவோ கேட்கப்படுகிறார்கள்.
செஹ்ராவத்தின் கருத்துப்படி, “எதிர்மறை உணர்ச்சிகளைக் குறைப்பது நம்மை பயனுள்ள முறையில் வைக்கிறது. எனவே, வெளியே சென்று உங்களை உற்சாகப்படுத்துவது உதவியாக இருந்தாலும், எதிர்மறை உணர்ச்சிகளை கையாள்வது கடைசி கட்டமாக இருக்க வேண்டும். பெரும்பாலும், துக்கப்படுவதும், அழுவதும், விரும்பத்தகாத உணர்ச்சிகளை அனுபவிப்பதும் இயல்பானது என்று நமக்கு கற்பிக்கப்படவில்லை.” என்று கூறுகிறார்.
குணப்படுத்துவதற்கு உங்களுக்கு நீங்களே நேரம் கொடுங்கள்
மணநலம் குணப்படுத்துவது படிப்படியான செயல்; பெரும்பாலான மக்கள் அதை அவசரமாக முயற்சிக்கிறார்கள்.
“இந்த சுழற்சியை நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும், நம்முடைய மனம் அதை தோல்வியாகக் கருதுகிறது. காலப்போக்கில், நீங்கள் சரியாக முடியாது என்று நீங்கள் நம்புகிறீர்கள். உங்கள் எதிர்மறை உணர்ச்சிகளை அடக்குவது என்பது அடக்கப்பட்ட எதிர்மறை உணர்ச்சிகளின் தொகுப்பை உருவாக்கக்கூடும்” என்று அவர் கூறினார்.
அவர்களின் நினைவுகளுக்கு மதிப்பளியுங்கள்
நம்முடைய அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் நினைவுகளை சம்பாதிக்கிறோம். இந்த உணர்ச்சி பரிவர்த்தனை விலைமதிப்பற்றது. “உங்கள் வாழ்நாள் வருமானத்தை நீண்ட கால துன்பங்களுடன் பரிமாறிக்கொள்ள முடியாது. மற்றவர்களிடம் இரக்கம் காட்டுவதன் மூலம் நினைவுகளை மகிழ்விக்க செய்யுங்கள். நீங்கள் ஒருவரின் உயிரைக் காப்பாற்றலாம், அது எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது என்பதை நீங்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்” என்று அவர் விளக்கினார்.