/tamil-ie/media/media_files/uploads/2020/06/template-2020-06-07T123613.813.jpg)
mental strength, how to develop mental strength, secret to becoming mentally strong, amy morin, ted talk, inspiring video, inspiring words, indianexpress.com, indianexpress
உங்களைப் பற்றிய, பிறரைப் பற்றிய, இந்த உலகத்தைப் பற்றிய ஆரோக்கியமற்ற நம்பிக்கைகளால் அடிக்கடி நீங்கள் உங்களுக்குள் போராடிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களின் மன ஆரோக்கியத்துக்கான நல்ல பழக்கங்களை பயிற்சி செய்ய வேண்டிய நேரம் இதுதான். அதனை எப்படி செய்வது என்பதற்கு இந்த மனதை ஈர்க்கும் வீடியோவை பாருங்கள்.
“உங்களுடைய சமூக வலைதள பக்கங்களை பார்க்கும்போது பிறர் மேல் அடிக்கடி நீங்கள் பொறாமைப் படுகிறீர்களா. அந்த வலையில் விழாமல் நீங்கள் வெளியே வேண்டிய நேரம் இதுதான்” என்று உரிமம் பெற்ற மருத்துவ சமூக சேவகர் மற்றும் உளவியலாளர் அமி மோரின் இந்த மனதை ஈர்க்கக் கூடிய டெட் உரையில் குறிப்பிட்டிருக்கின்றார். “தனக்கு தானே வருத்தப்படுவது, இந்த உலகத்தைப் பற்றி, பிறரைப் பற்றி ஆரோக்கிய மற்ற நம்பிகைகளைக் கொண்டிருப்பது ஆகியவை எல்லாமே அதிருப்தியின் மற்றும் மோசமான மனநலத்தின் வெளிப்பாடுகள்” என்கிறார் அவர். தமது சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை நினைவு கூறும் மோரின், தொடர்ந்து விவரிக்கையில், “மோசமான, வருத்தமான நினைவுகளை பிடித்து வைத்திருப்பதற்கு பதில் அதில் இருந்து வெளியேறி நல்ல நினைவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்” என்கிறார்.
“இந்த அனைத்தின் மூலம், ஏதோ ஒருநாள் , வாழ்க்கை நல்லதாக மாறும் என்ற நம்பிக்கையை நான் கொண்டிருந்தேன். வாழ்க்கை முழுவதும் எதிர்வினைகள் நிறைந்ததுதான். பாதகமான விளைவுகளைத் தரும் எதுபோன்ற எண்ணங்களை நான் கொண்டிருக்கின்றேனோ அது என்னை பின்னால் இழுக்கும். இன்னும் ஒரு இழப்பை சந்திக்கக் கூடிய அளவுக்கு என்னால் அதிக மன வலிமை பெற முடியும் என்று எனக்குத் தெரியும். எனவே, நான் ஒரு இடத்தில் உட்கார்ந்து, மன ரீதியாக வலிமை உள்ளவர்கள் செய்ய முடியாதவற்றை பட்டியலாக எழுதினேன். மனதளவில் வலிமையாக மாற வேறு ஒருவரின் வெற்றியை எதிர்ப்பது மனதளவில் வலிமையாக மாறும் என்பது போன்ற மோசமான மன பழக்கங்களை விட்டு விடுங்கள்” என்கிறார் மன வலிமை உள்ளவர்கள் செய்யக் கூடாத13 விஷயங்கள் என்ற புத்தகத்தை எழுதியதன் மூலம் புகழ் பெற்றவர் இவர்.
“மனம் மற்றும் உடல் வலிமை ஆகியவற்றுக்கு இடையே ஒப்பீடு செய்து பார்த்தால், வாழ்க்கை என்பது முழுமையான அழகான ஒன்றல்ல என்பதை யார் ஒருவரும் ஒப்புக்கொள்வார்கள்” என்கிறார் மோரின்.
“மன வலிமை என்பது உடல் வலிமையைப் போன்ற ஒன்றுதான். ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது போன்ற தவறான பழக்கங்களை விட்டு விட்டு உடலை வலுப்படுத்த வேண்டும். மன வலிமையைப் பொறுத்தவரை மோசமான பழக்க வழங்கங்களை விட்டுக் கொடுத்து விட்டு. நன்றி உணர்வை நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும். ஆரோக்கியமற்ற நம்பிக்கைகளுக்கு இது பதிலடி கொடுக்க ஆரம்பிக்கும். உணர்ச்சிகளில் இருந்து தப்பிச் செல்வதை விடவும், அதனை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவர். உங்களை பிறருடன் ஒப்பீடு செய்து பார்ப்பதை நிறுத்துங்கள்,” என்று மோரின் குறிப்பிடுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us