இந்த மாதம் ஒரே நாளில் 2 முறை அபூர்வ புதன் பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு செம்ம லக்!

நவகிரகங்களின் இளவரசனான புதன், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 30-ம் தேதி சிம்ம ராசியிலும், கேதுவின் மகம் நட்சத்திரத்திலும் நுழைகிறார். இந்த மாற்றம் மகரம், ரிஷபம், சிம்மம் ஆகிய 3 ராசிகளுக்கு நன்மைகளைத் தரப்போவதாக ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

நவகிரகங்களின் இளவரசனான புதன், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 30-ம் தேதி சிம்ம ராசியிலும், கேதுவின் மகம் நட்சத்திரத்திலும் நுழைகிறார். இந்த மாற்றம் மகரம், ரிஷபம், சிம்மம் ஆகிய 3 ராசிகளுக்கு நன்மைகளைத் தரப்போவதாக ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Astrology predictions

இந்த மாதம் ஒரே நாளில் 2 முறை அபூர்வ புதன் பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு செம்ம லக்!

நவகிரகங்களின் இளவரசனான புதன் பகவான், வரும் 30-ம் தேதி சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். அதே நாளில் கேதுவுக்கு உரிய மகம் நட்சத்திரத்திலும் புதன் நுழைய உள்ளார். இப்படி ஒரே நாளில் ராசியையும் நட்சத்திரத்தையும் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதன் மாற்றுவதால், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நன்மைகளும் அதிர்ஷ்டமும் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஜோதிட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். புதனின் இந்த நிலை மாற்றம் எந்தெந்த ராசிகளுக்குப் பலன் தரும் என்று விரிவாகப் பார்ப்போம்.

மகரம்: 

Advertisment

புதனின் இந்த மாற்றம் மகர ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தைப் பிரகாசிக்கச் செய்யும். வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பணியிடத்தில் முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தால் அனைத்து வேலைகளையும் திறம்பட செய்து முடிப்பீர்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்குப் புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவார்கள். பெற்றோருடனான உறவு சிறப்பாக இருக்கும். குறிப்பாக, ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கக்கூடும். இதுவரை செய்த முதலீடுகளிலிருந்து நல்ல வருமானம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் உங்கள் உறவு மேலும் வலுப்படும்.

சிம்மம்:

புதனின் ராசி மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மதிப்பையும் மரியாதையையும் அதிகரிக்க செய்யும். திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வரன் தேடிவரும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் மூலம் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் மேம்பட்டு, அதன் மூலம் பதவி உயர்வு (அ) சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில்முனைவோர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதுடன், புதிய ஒப்பந்தங்களை பெறக் கூடும்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: