Merry Christmas 2020 wishes photos, images, status, quotes : கிறிஸ்துமஸ் ஒரு புதிய நம்பிக்கையான ஆண்டுக்குள் நுழைவதற்கு முன்பு துதிப்பாடல்கள், சேர்ந்திசைப் பாடல்கள் பாடி சுவையான உணவுடன் மகிழ்ச்சியாக கொண்டாடப்படுவது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் முன்பு எப்போதும் இல்லாத ஒரு சூழலில் வருவதால் அனைவரும் அன்புடன் கொண்டாடுவதன் மூலம் பண்டிகையை நிறைவு செய்யலாம்.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இல்லாமல் பண்டிகை காலம் கொண்டாட்டமாக இருக்காது. அதனால்தான், கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலங்களில் நண்பர்களையும் உறவினர்களையும் வாழ்த்துவது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. காலங்கள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், நம்மைச் சுற்றியுள்ள அன்பானவரகளுக்காக நாம் பயணம் செய்வோம். கிறிஸ்துமஸ் நாளில் நாம் கண்களில் நம்பிக்கையுடனும், இதயத்தில் அன்புடனும், நம்முடைய அன்பானவர்களுக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவிப்போம்.
/tamil-ie/media/media_files/uploads/2020/12/Christmas-wishes-2-300x300.jpg)
அதனால், இந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்க நீங்கள் சிறப்பான மேற்கோள்களையும் புகைப்படங்களையும் தேடுகிறீர்கள் என்றால், இந்தியன் எக்ஸ்பிரஸ் உங்களுக்காக அழகான கிறிஸ்துமஸ் வாழ்த்து புகைப்படங்களையும் சிறப்பான வாழ்த்து வாசகங்களையும் ஸ்டேட்டஸ் புகைப்படங்களையும் வாழ்த்துச் செய்திகளையும் அளிக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2020/12/Christmas-wishes-3-300x300.jpg)
* ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்களோ அதற்கான புதிய வாய்ப்புகள் வந்து சேரட்டும்!
/tamil-ie/media/media_files/uploads/2020/12/Christmas-wishes-4-300x300.jpg)
* வாழ்க்கை உங்களுக்கு சுவாரஸ்யமானதாக இருக்கட்டும். அந்த சுவாரஸியம் உங்களுக்கு எப்போதும் நிகழட்டும். இந்த ஆண்டின் எல்லா நாட்களையும் கொண்டாடுங்கள்!
/tamil-ie/media/media_files/uploads/2020/12/Christmas-wishes-5-300x300.jpg)
* இந்த ஆண்டு மகிழ்ச்சியுடன் பிரகாசமான வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"