Merry Christmas 2020 Images, Whatsapp and Facebook Status: கிறிஸ்துமஸ் நன்னாளில் அனைத்து மக்களுக்கும் நல்வாழ்த்துக்களை ஐஇ தமிழ் தெரிவித்துக் கொள்கிறது.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மனித குலம் ஞானவொளி பெற இயேசு கிறிஸ்துவால் போதிக்கப்பட்ட கருணை, மன்னிப்பு ஆகிய மாண்புகள் மீது நமது நம்பிக்கையை கிறிஸ்துமஸ் விழா மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்த திருநாளில் உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் வாழ்த்து புகைப்படங்கள் அனுப்ப இந்தியன் எக்ஸ்பிரஸ் பிரத்யேக வாழ்த்துப் படங்களை வடிவமைத்துள்ளது.






ஏசுவின் செய்தி அனைத்துக் காலத்துக்கும் , அனைத்து பண்பாட்டுக்கும், அனைத்து சமயங்களுக்கும், அனைத்து நாடுகளுக்கும் ஆனது. இன, சாதி, சமய, தேசிய வேறுபாடுகள் இன்றி உலகெங்கும் உள்ள மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.