சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து உப்பு, சர்க்கரை பிராண்டுகளிலும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பதால் அவை அதிகரித்து வரும் கவலையாக மாறியுள்ளன. சாதாரண கண்ணால் கண்டறிய முடியாத அளவுக்கு இந்த துகள்கள் சிறியதாக இருந்தாலும், உங்கள் உணவில் அவை இருக்கிறதா என்பதை கண்டறிய சில வழிகள் உள்ளன.
உங்கள் உணவில் மைக்ரோபிளாஸ்டிக்ஸைப் கண்டுபிடிக்க டாக்டர் நரேந்திர சிங்லா (Lead Consultant – Internal Medicine at the CK Birla Hospital, Delhi) பரிந்துரைத்த சில விஷயங்கள் இங்கே:
டென்சிட்டி டெஸ்ட்
இந்த ஹோம்மேட் டென்சிட்டி டெஸ்ட் மூலம் உணவில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக்ஸை நீங்கள் வீட்டிலேயே எளிதாக கண்டறியலாம்.
ஒரு கண்ணாடி டம்ளரில் கால் பாதி, வெஜிடபிள் ஆயில், தேன், கார்ன் சிரப் இதில் ஏதேனும் ஒன்றை நிரப்பவும்.
நீங்கள் சோதிக்க விரும்பும் உப்பு அல்லது சர்க்கரையை கொஞ்சமாக அதில் சேர்க்கவும். இதை நன்கு கலக்கவும்.
நல்ல உப்பு, சர்க்கரை எந்த வினையுமின்றி அதில் கலந்து விடும். அதேநேரம் அதில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருந்தால் அது மேலே மிதக்கலாம், லேயர்ஸ் உருவாக்கலாம் அல்லது அடிப்பகுதியில் மூழ்கலாம்.
/indian-express-tamil/media/media_files/rP9J57HjDWcD3RRk7xeQ.jpg)
காபி பில்டர்ஸ்
மைக்ரோபிளாஸ்டிக்ஸ், குறிப்பாக திரவங்களில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க காபி பில்டர் பயன்படுத்தலாம்.
பில்டர்ஸ் மூலம் திரவத்தை ஊற்றி, எச்சத்தை ஆராயுங்கள். கரையாத மைக்ரோபிளாஸ்டிக்ஸ் சிறிய துகள்களாக அதில் சேரலாம்.
இந்த முறை, தண்ணீர் அல்லது பிற பானங்களை சரிபார்க்க பயனுள்ளதாக இருக்கும், இருப்பினும் திட உணவுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்காது.
ஷேக் டெஸ்ட்
உப்பு அல்லது சர்க்கரைக்கு, நீங்கள் ஒரு எளிய ஷேக் டெஸ்ட் செய்யலாம்.
உப்பு அல்லது சர்க்கரையின் கன்டெய்னரை குலுக்கி, சிறிது டார்க் சர்ஃபேஸில் ஊற்றவும். ஏதேனும் அசாதாரண துகள்கள் வெளியே விழுகிறதா என்பதை உன்னிப்பாகப் பார்க்கவும்.
சிறிய துகள்களை நீங்கள் கவனித்தால், அது மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பதைக் குறிக்கலாம்.
மாசுபாட்டின் அபாயத்தைக் குறைக்க, உங்கள் சமையலறை பாத்திரங்களை தவறாமல் சுத்தம் செய்வது முக்கியம், குறிப்பாக இறைச்சி, கோழி அல்லது கடல் உணவுகளுக்கு அவற்றைப் பயன்படுத்திய பிறகு. இந்த நடைமுறைகள் மைக்ரோபிளாஸ்டிக்ஸை உட்கொள்வதற்கான வாய்ப்பைக் குறைக்க உதவும்.
மேலே சொன்ன சோதனைகள் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பதற்கான சில அறிகுறிகளை வழங்க முடியும் என்றாலும், அவை முற்றிலும் நம்பகமானவை அல்ல, என்று டாக்டர் சிங்லா எச்சரித்தார்.
துல்லியமான கண்டறிதலுக்கு, மேம்பட்ட சோதனை செய்யக்கூடிய ஆய்வகத்திற்கு உணவு மாதிரிகளை அனுப்புவது சிறந்தது. இது உங்கள் உணவில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக்கின் அளவுகள் மற்றும் உங்கள் ஆரோக்கியத்தில் அவற்றின் சாத்தியமான தாக்கம் பற்றிய தெளிவான புரிதலை வழங்கும்.
Read in English: Here’s how to spot microplastics in your food at home
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“