Advertisment

ஒற்றைத் தலைவலி வர காரணம்; பூரண குணமடைய என்ன செய்வது?

அதிக வேலை, மனக் குழப்பம், மன அழுத்தம் ஆகியவையே, ஒற்றைத் தலைவலி வருவதற்கு முக்கியமான காரணங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Migraine headache symptoms

Migraine headache symptoms

ஓற்றைத் தலைவலியானது குழந்தை பருவத்திலோ, இளம் பருவத்திலோ அல்லது முதுமை பருவத்திலோ கூட வரலாம். 75 சதவீதம் பெண்களுக்கு மட்டுமே ஒற்றை தலைவலி ஏற்படுவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

Advertisment

குறிப்பாக 35 முதல் 45 வயது உள்ளவர்கள் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பூப்பெய்தும் காலம், மாதவிலக்கு வரும் காலகட்டம், மெனோபாஸ் நிலையை அடையும்போது, கருத்தடைக்காக ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிடும் நேரத்திலும் ஒற்றைத்தலைவலி வருவதற்கான சாத்தியம் அதிகம்.

இதுதவிர அதிக வேலை, மனக் குழப்பம், மன அழுத்தம் ஆகியவையே, ஒற்றைத் தலைவலி வருவதற்கு முக்கியமான காரணங்கள். உடலின் வெப்பமும் தலைவலி வருவதற்கு ஒரு காரணம். உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது, தலைக்குச் செல்லும் நரம்பு மண்டலங்களில் ரத்த ஓட்டம் தடைப்படும். இதனால், அதன் இயக்கத்தில் மாறுபாடு உண்டாகி, தலைவலி வரும். சிலருக்கு மலச்சிக்கல் பிரச்சினை இருந்தாலும், உடலில் வெப்பம் அதிகமாகி, தலைவலியை உண்டாக்கும்.

அறிகுறிகள் என்ன?

குமட்டல், வாந்தி, ஒளி அல்லது ஒலியை உணர்வதில் சிக்கல், அவ்வப்போது பார்வைக் குறைபாடுகள் போன்றவை இந்த ஒற்றைத் தலைவலியின் முக்கியமான அறிகுறிகள்.

தலைவலி அடிக்கடி வந்தால், சாதாரணத் தலைவலி என்று புறக்கணிக்காமல், ஏன் ஏற்படுகிறது எனக் காரணத்தை ஆராய மருத்துவரை அணுக வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் காரணிகள் வேறுபடும். எனவே நீங்கள் எப்போதாவது ஒற்றைத் தலைவலியைப் அனுபவித்தால், அதன் அறிகுறிகள் தொடங்குவதற்கு முன்பாகவே தற்காத்து கொள்ளவது மிக முக்கியமானதாகும்.

ஆனால்  சித்த மருத்துவம் மட்டுமே  முழுமையான குணம் அளிக்கும்.

சித்த மருத்துவத்தில் ஒரே ஒரு தைலம் இந்த ஒற்றைத் தலைவலியை  ஆயுள் காலம் முழுவதும் வராமல்  அழிக்கும் குணம் கொண்டது. எனவே சித்த மருத்துவத்தில் நம்பிக்கை கொண்டு உங்கள் சிகிச்சையை தொடங்குங்கள்.

தகவல் உதவி: மருத்துவர் முத்துக்குமார், சித்த மருத்துவ சிறப்பு நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர், வாட்ஸ் அப் தொடர்பு எண் 9344186480.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment