உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி வலிமிகுந்த ஒற்றைத் தலைவலி - உலகில் உள்ள ஒவ்வொரு 7 பேரில் குறைந்தது ஒருவரை பாதிக்கிறது. மேலும், இது ஆண்களை விட பெண்களில் 3 மடங்கு அதிகம். பெரும்பாலும், ஒற்றைத் தலைவலியை சமாளிக்க மாத்திரைகளைப் பயன்படுத்துகிறோம், இருப்பினும், ஆயுர்வேத நிபுணர் டிக்ஸா பவ்சர் சவாலியா, அறிகுறிகளைப் போக்க இயற்கையான வழிகளுக்கு மாறுமாறு அறிவுறுத்துகிறார்.
Advertisment
எனவே, ஒற்றைத் தலைவலியை குணப்படுத்த உங்கள் கிச்சனில் உள்ள சில பொருட்களை நிபுணர் பட்டியலிட்டுள்ளார். ஒற்றைத் தலைவலி அறிகுறிகளுக்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட்டு, உங்கள் சமையலறையில் உள்ள இந்த ஆயுர்வேத தீர்வுகளுக்கு மாறுங்கள், என்று அவர் கூறினார்.
காய்ந்த திராட்சை
மூலிகை தேநீர் (1 டீஸ்பூன் கொத்தமல்லி, 1 டீஸ்பூன் பெருஞ்சீரகம், 5-7 புதினா இலைகள் மற்றும் 10 கறிவேப்பிலை 1 கிளாஸ் தண்ணீரில் 3-5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவைத்து) குடித்த பிறகு, முதலில் காலை, 10-15 இரவு ஊறவைத்த காய்ந்த திராட்சை சாப்பிடுங்கள்.
ஒற்றைத் தலைவலியைப் போக்குவதில் இது அற்புதமாகச் செயல்படுகிறது. தொடர்ந்து 12 வாரங்கள் எடுத்துக் கொண்டால், உடலில் உள்ள அதிகப்படியான பித்தம் மற்றும் மோசமான வாதத்தை குறைத்து, ஒற்றைத் தலைவலியுடன் தொடர்புடைய அசிடிட்டி, குமட்டல், எரிச்சல், ஒற்றைத் தலைவலி, வெப்பத்திற்கு சகிப்புத்தன்மையின்மை போன்ற அனைத்து அறிகுறிகளையும் அமைதிப்படுத்துகிறது.
சீரகம்-ஏலக்காய் டீ
இதை மதிய உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு ஒரு மணி நேரம் கழித்து அல்லது ஒற்றைத் தலைவலி அறிகுறிகள் அதிகமாக இருக்கும் போதெல்லாம் எடுத்துக் கொள்ளலாம். குமட்டல் மற்றும் மன அழுத்தத்தை போக்க இது சிறப்பாக செயல்படுகிறது.
செய்முறை:
அரை கிளாஸ் தண்ணீரை எடுத்து, அதில் 1 டீஸ்பூன் சீரகம், 1 ஏலக்காய் சேர்க்கவும். 3 நிமிடம் கொதிக்க வைத்து, இந்த தேநீரை வடிகட்டி பருகவும்.
சந்தேகத்திற்கு இடமின்றி, சீரகம் மற்றும் ஏலக்காய் டீ ஆகியவை ஒற்றைத் தலைவலிக்கு உதவுகின்றன, என்று ஊட்டச்சத்து நிபுணர் ரீமா கிஞ்சல்கர் கூறினார்.
ஒற்றைத் தலைவலியை எவ்வாறு சமாளிப்பது உதவுகிறது என்பதை விளக்கிய அவர், இந்த நிலை உயர்ந்த ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் மூளையில் நியூரோஜெனிக் அழற்சியுடன் தொடர்புடையது, எனவே ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட உணவு, இந்த மன அழுத்தத்தையும் வீக்கத்தையும் எதிர்கொள்ள முக்கியமானது என்று கூறினார்.
குறிப்பாக ஆக்ஸிஜனேற்றிகள், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கின்றன மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகின்றன, இதனால் திசு அழற்சியைக் குறைக்கிறது.
சீரகத்தில் அபிஜெனின் மற்றும் லுடோலின் உள்ளிட்ட ஃபிளாவனாய்டுகள் உள்ளன, அதேசமயம் ஏலக்காயில் α-டெர்பினைல் அசிடேட்டுகள் உள்ளன, அவை ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளன.
மேலும், ஏலக்காய் தசை திசுக்களை தளர்த்தும், தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலிக்கு உதவும் ஆண்டிஸ்பாஸ்மோடிக் விளைவைக் கொண்டுள்ளது, என்று ரீமா மேலும் கூறினார்.
பசு நெய்
உடல் மற்றும் மனத்தில் அதிகப்படியான பித்தத்தை சமநிலைப்படுத்துவதில் பசு நெய்யை விட சிறப்பாக எதுவும் செயல்படாது என்று டாக்டர் டிக்சா மேலும் கூறினார்.
நெய்யை உட்கொள்ள சிறந்த வழி:
*ரொட்டியில், அரிசியில் அல்லது காய்கறிகளை நெய்யில் வதக்கும்போது உணவில் சேர்க்கலாம்
*உறங்கும் போது பாலுடன் சாப்பிடலாம்
*நெய்யை நாசி வழியாக உட்கொள்ளலாம் (நாசியில் 2 துளிகள் ஊற்றவும்)
*இதை மருந்துகளுடன் சேர்த்தும் உட்கொள்ளலாம். ஒற்றைத் தலைவலிக்கான சில மூலிகைகளான பிரம்மி, சங்குப்பூ, அதிமதுரம் போன்றவற்றை நெய்யுடன் சேர்த்து சாப்பிடலாம்.
கூடுதலாக, ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றவும், மூச்சு பயிற்சி செய்யவும், ஒற்றைத் தலைவலியை வேரிலிருந்தே குணப்படுத்தவும் அவர் பரிந்துரைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“