சளி, இருமல், ஜலதோஷத்தை ஓட ஓட விரட்டும் மிளகு, மல்லி சூப்!

நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு.

Milagu Malli Soup
மிளகு, மல்லி சூப்

இந்த காலநிலை சளி, இருமல், ஜலதோஷம் போன்றவற்றை உண்டாக்கக் கூடியது. ஆனால் பயம் தேவையில்லை. இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே இதிலிருந்து மீண்டு விடலாம். நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும். நோய்த்தொற்றை உண்டாக்கும் ஆபத்தான சால்மோனெல்லா என்ற பாக்டீரியாவை அழிக்க மல்லி பயன்படுகிறது. மல்லியில் பைட்டோ நியூட்ரியண்ட் குணங்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்களும் அடங்கியிருக்கிறது. இதுவே நமக்கு மருத்துவரீதியான பலனைக் கொடுப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ஆகையால் எளிதான மிளகு – மல்லி சூப் உங்களின் சளி, இருமல், காய்ச்சலை ஓட ஓட விரட்டும்.

டி.என்.பி.எஸ்.சி-யில் தேர்ச்சி: பணிக்காக காத்திருக்கும் பார்வையற்ற தாமரை

தேவையானப் பொருட்கள்

ஊற வைத்த பாசிப்பருப்பு – 100 கிராம்

மிளகு – ஒரு டீஸ்பூன்

பிரியாணி இலை – 2

சீரகம், மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

வெங்காயம் – 2

நறுக்கிய கேரட் – கால் கப்

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், மிளகு, பிரியாணி இலை தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், கேரட், ஊற வைத்த பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வதக்கியவுடன், எல்லா தூள்களையும் ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கலந்து தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

பின்னர் இறக்குவதற்கு முன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து ஒரு முறை கொதிக்க வைத்து சூடாகப் பரிமாறவும்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Milagu malli soup for cold cough milagu malli soup video

Next Story
காதல் கணவர், கல்லூரி செல்லும் மகள்: தெய்வமகள் அண்ணியார்!Tamil Serial News, Deivamagal Anniyar Rekha Krishnappa
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com