உங்க வீட்டு டாக்டரே ‘இவங்க’தான்! சூப்பரான மிளகு ரசம் செய்முறை

Milagu Rasam making tamil video: உடலை சிரமப்படுத்தத் தேவையில்லை. உங்க வீட்டு சமையல் அறையில் இல்லாத மருத்துவம், வேறு எங்கும் இல்லை.

By: September 18, 2020, 7:29:52 AM

Milagu Rasam Tamil, Milagu Rasam making tamil video: நோய் எதிர்ப்பு சக்தி, ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமான காலகட்டம் இது. இதற்காக கண்ட மருந்துகளையும் வாங்கி, உடலை சிரமப்படுத்தத் தேவையில்லை. உங்க வீட்டு சமையல் அறையில் இல்லாத மருத்துவம், வேறு எங்கும் இல்லை.

அப்படி, அற்புதமான மருத்துவத் தன்மை கொண்ட ஒரு உணவுப் பொருள்தான் மிளகு. இதனுடன் பூண்டும் சேர்ந்துகொண்டால், அதன் நோய் எதிர்ப்பு சக்தி இரட்டிப்பு ஆகும். மிளகு, பூண்டு ஆகியவற்றைக் கொண்டு ரசம் வைக்கும் முறையை இங்கு காணலாம்.

Milagu Rasam making tamil video: மிளகு ரசம்

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மிளகு ரசம் வைக்கத் தேவையான பொருட்கள் :

புளி கரைசல் – 2 மேசைக் கரண்டி, தக்காளி- 1, கறிவேப்பிலை – சிறிதளவு, கருப்பு மிளகு – 2 தேக்கரண்டி, பூண்டு – 6 பல், காய்ந்த சிவப்பு மிளகாய் – 3, சீரகம் – 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவைக்கு, மஞ்சள் – அரை தேக்கரண்டி, கடுகு- 1 தேக்கரண்டி, எண்ணெய்- 1 தேக்கரண்டி

மிளகு ரசம் செய்முறை :

முதலில் கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். 2 சிவப்பு மிளகாய், கருப்பு மிளகு, சீரகம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுக்கவும். பின்னர் சூடு ஆறியதும் மிக்சியில் போட்டு கூழ் ஆகாத அளவு அரைத்துகொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய தக்காளி மற்றும் மீதமுள்ள கறிவேப்பிலை, மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் தக்காளி குழைய வதக்கவும். அடுத்து அதில் அரைத்த மசாலாவைச் சேர்த்து வதக்கவும்.

புளிக் கரைச்சலுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும், தீயைக் குறைக்கவும். கடாயை மூடி வைத்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். அடுத்து அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லி சேர்த்து, பரிமாறவும். தேவைப்பட்டால், சிறிது மிளகு தூள் சேர்க்கவும். இந்த ரசத்தை அதிக நேரம் கொதிக்க விடக் கூடாது.

நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த இந்த ரசத்தை சாதத்துடன் இணைத்து பயன்படுத்துங்கள்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Milagu rasam tamil milagu rasam making tamil video pepper rasam recipe

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X