நீங்கள் தூக்கம் வராமல் நீண்ட நேரம் படுக்கையில் விழித்திருக்கிறீர்களா? முதலில் இது ஒரு பிரச்சனையாகத் தெரியவில்லை என்றாலும், நாள்பட்ட தூக்கமின்மை உங்கள் ஆரோக்கியத்தையும் ஹார்மோன்களையும் பாதிக்கலாம். எனவே, ஒருவர் உடல் ஓய்வெடுக்கவும், வேகமாக தூங்கவும் சில வழக்கங்களை பின்பற்ற வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Advertisment
எனவே, நீங்கள் கண்களை மூடி தூங்க முயற்சிக்கிறீர்கள் என்றால், உங்களுக்காக சில எளிய வைத்தியம் எங்களிடம் உள்ளது, இது சில நிமிடங்களில் நீங்கள் தூங்குவதற்கு உதவும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தூங்குவதற்கான இராணுவ முறையை (military method of sleeping) பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஹெல்த்லைன்.காமின் படி, ஷரோன் அக்கர்மேன் என்பவரால் இது முதலில் அறிவிக்கப்பட்டது - இது ரிலாக்ஸ் அண்ட் வின்: சாம்பியன்ஷிப் பெர்ஃபார்மன்ஸ் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு நிமிடங்களுக்குள் தூங்குவதற்கு இந்த நுட்பம் உதவுகிறது! அதைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்.
Advertisment
Advertisements
மும்பையைச் சேர்ந்த இயற்கை மருத்துவ நிபுணர் சந்தோஷ் பாண்டே, இராணுவ முறை "உடல் தளர்வு நுட்பங்கள் மற்றும் மனதைத் தெளிவுபடுத்தும் நுட்பங்களைப் பயன்படுத்துகிறது, இதனால் ஒருவர் விரைவில் தூங்க முடியும்" என்று விளக்கினார். மிகவும் சங்கடமான சூழ்நிலைகளில் மக்கள் தூங்குவதற்கு இந்த நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
படிகள் பின்வருமாறு
* உங்கள் வாயில் உள்ள தசைகள் உட்பட உங்கள் முழு முகத்தையும் ரிலாக்ஸ் செய்யவும்.
*பதற்றத்தை போக்க உங்கள் தோள்களை தளர்த்தி, உங்கள் கைகளை உங்கள் உடலின் பக்கவாட்டில் விடவும்.
* மூச்சை வெளியே விடுங்கள், உங்கள் மார்பைத் தளர்த்தவும். உங்கள் கால்கள், தொடைகள் மற்றும் பின்னங்கால்களையும் ரிலாக்ஸ் செய்யவும்.
* ஒரு நிதானமான காட்சியை கற்பனை செய்து 10 வினாடிகள் உங்கள் மனதை தெளிவுபடுத்துங்கள்.
உதாரணமாக, ஸ்டெட்ஃபாஸ்ட் நியூட்ரிஷனின் நிறுவனர் அமன் பூரி, ஒரு இயற்கைக் காட்சியையோ அல்லது மனதைத் தளர்த்தும் ஒரு சூழ்நிலையையோ கற்பனை செய்து பாருங்கள் என்றார். மனதை ஒருமுகப்படுத்த செய்ய முயற்சி செய்யுங்கள், அதிகம் யோசிக்காதீர்கள். எண்ணங்கள் தொடர்ந்தால், தலைகீழாக எண்ண முயற்சிக்கவும்.
இதன் மூலம், நீங்கள் குறைந்தபட்சம் எந்த ஊடுருவும் எண்ணங்களும் இல்லாமல் முழுமையான தளர்வு நிலைக்கு நுழைவீர்கள், இது தொந்தரவு செய்யும் கனவுகள் இல்லாமல் நன்றாக தூங்க உதவுகிறது என்று மருத்துவர் பூரி இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்துக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
ஒருவேளை இது வேலை செய்யவில்லை என்றால், "நினைக்காதே" என்ற வார்த்தைகளை 10 வினாடிகளுக்கு மீண்டும் மீண்டும் சொல்ல முயற்சிக்கவும். 10 வினாடிகளுக்குள், நீங்கள் தூங்க வேண்டும், மருத்துவர் பாண்டே குறிப்பிட்டார்.
நீங்கள் நன்றாக தூங்குகிறீர்களா?
குறிப்பிடத்தக்க வகையில், இந்த முறை முடிவதற்கு 120 வினாடிகள் எடுக்கும் போது, கடைசி 10 வினாடிகள்தான் இறுதியாக உறக்கநிலைக்கு எடுக்கும். நீங்கள் இதைச் செய்யும்போது, உங்கள் உடல் ஒரு வசதியான நிலையில் இருக்கும்போது, எவ்வளவு நிதானமாக உணர்கிறது என்பதில் கவனம் செலுத்துங்கள், என்று பாண்டே குறிப்பிட்டார்.
ஊட்டச்சத்து நிபுணரும் உணவுப் பயிற்சியாளருமான அனுபமா மேனன், இரவில் நீங்கள் நன்றாக தூங்குவதை உறுதிசெய்யும் சில குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.
*உறங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் உங்கள் மொபைல்கள் மற்றும் மடிக்கணினிகளை அணைக்கவும், உங்கள் அறையில் ஒரு டிஃப்பியூசரை ஏற்றி வைக்கவும். (லாவெண்டர் தூக்கம் வர நன்கு உதவுகிறது), அமைதியான இசையை கேளுங்கள்.
* இரண்டு தேக்கரண்டி எப்சம் உப்பு மற்றும் சில துளிகள் லாவெண்டர் எண்ணெய் கலந்த சூடான நீரில், 10 நிமிடங்களுக்கு கால்களை வைக்கவும் (உங்கள் பின்னங்கால் முழுவதும் மூழ்கும் வரை).
* உங்கள் கால்களை நனைக்கும் போது, புத்தகம் படிப்பது / இசை கேட்பது பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் கால்களை உலர்த்தி படுக்கையில் ஏறி, ஆலிவ் எண்ணெயைக் கொண்டு உங்கள் பாதத்தின் அடிப்பகுதியில் நன்றாக மசாஜ் செய்யுங்கள்.
* ஆழ்ந்த மூச்சு எடுக்கவும். நான்கு முறை மூச்சை உள்ளிழுக்கவும். பிறகு மூச்சை பிடித்துக்கொள்ளுங்கள். அடுத்து ஏழு முறை மூச்சை வெளியே விடுங்கள். இதை மூன்று சுற்று செய்யுங்கள் என்று மருத்துவர் அனுபமா பரிந்துரைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“