20 நிமிடங்களுக்குள் இந்த பால் பன் ரெசிபியை நாம் செய்ய முடியும். மேலும் இது மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
2 ஸ்பூன் நெய்
2 ஸ்பூன் பொடித்த சர்க்கரை
2 சிட்டிகை சோடா உப்பு
2 கப் மைதா மாவு
4 ஸ்பூன் தயிர்
2 கப் சர்க்கரை
சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர்
பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நெய், 2 ஸ்பூன் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்றாக அடித்துகொள்ளவும். தொடர்ந்து அதில் சோட உப்பு, மைதா மாவு, தயிர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். தண்ணீர் சேர்த்துகொள்ளலாம். ஆனால் மாவு ரொம்பவும் கட்டியாகவோ, தண்ணீராகவோ இருக்க கூடாது. தொடர்ந்து இதை அப்படியே விடவும். தற்போது ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து, அதை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து பாகு ரெடி செய்துகொள்ளவும். தொடர்ந்து நாம் ரெடி செய்து வைத்த மாவை எண்ணெய் சிறிய உருண்டைகளாக பொறிக்க வேண்டும். மிதமான தீயில் பொறிப்பது மிகவும் முக்கியம். தொடர்ந்து பொறித்த பன்னை, சர்க்கரை பாகில் சேர்த்தால், நாவில் கரையும் பால் பன் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“