scorecardresearch

வித்தியாசமான ரெசிப்பீ: சுவையான மில்க் கேக் பக்லவா!

பத்தாவது ப்லோ சீட் வைக்கும் போது பாஸ்ட்ரியை சற்று அழுத்தி சமமாக இருக்கும் படி செய்ய வேண்டும்.

வித்தியாசமான ரெசிப்பீ: சுவையான மில்க் கேக் பக்லவா!
Milk Cake Baklava

மில்க் பக்லவா கேக் என்பது ஒரு எளிதான ரெசிபி. பார்ப்பதற்கு மென்மையாக இருப்பதோடு இனிப்பாகவும் சுவையாகவும் இருக்கும். பக்லவா என்பது சிரப் தன்மையிலான கிரீக் டிசர்ட்.

மிகவும் சுவையான இந்த கேக்கில், ஏலக்காய் மற்றும் ஆரஞ்சு பழ நறுமணத்தையும் சேர்த்து கொள்ளலாம். இனிப்பாக இருந்தாலும் அதிக கலோரிகள் கிடையாது.

இந்த மில்க் கேக் பக்லவா எப்படி செய்வது ?

தேவையான பொருட்கள்

ப்லோ சீட் – 10

மில்க் கேக் – 7-8 துண்டுகள்

நறுக்கிய பிஸ்தா பருப்புகள் – 1/2 கப்

உருக்கிய வெண்ணெய் – 3/4 கப்

சர்க்கரை – 2 கப்

தண்ணீர் – 2 கப்

முதலில் மடிக்காத ப்லோ சீட்டை எடுத்து, பேக்கிங் ட்ரேயில் விரிக்க வேண்டும். சீட்டின் மீது, வெண்ணெய்யை தடவ வேண்டும். பின் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் மில்க் கேக்கை உதிர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் மில்க் கேக் மற்றும் பிஸ்தா பருப்புகளை நன்றாக கலக்கி பாத்திரத்தில் உள்ள கலவையில் ஒரு சிறிய பகுதியை எடுத்து பேக்கிங் ட்ரேயில் பரப்பி, மறுபடியும் ஒரு ப்லோ சீட்டை அதன் மேல் வைத்து வெண்ணெய்யை தடவ வேண்டும். பின்னர் மில்க் கேக் மற்றும் பிஸ்தா கலவையை பாத்திரத்தில் இருந்து எடுத்து இன்னொரு லேயர் பரப்ப வேண்டும்.

இப்பொழுது இன்னொரு ப்லோ சீட்டை எடுத்து அதன் மேல் வைத்து வெண்ணெய்யை தடவி, லேயர் லேயராக 10 ப்லோ சீட்டுகள் வரை பயன்படுத்த வேண்டும். மேலும் பத்தாவது ப்லோ சீட் வைக்கும் போது பாஸ்ட்ரியை சற்று அழுத்தி சமமாக இருக்கும் படி செய்ய வேண்டும்.

இப்பொழுது வெண்ணெய்யை எடுத்து கடைசி ப்லோ சீட்டில் பரப்ப வேண்டும். இதை ப்ரிட்ஜில் வைத்து குறைந்தது 1 மணி நேரம் குளிர்வித்து பிறகு அதை எடுத்து அறை வெப்பநிலை வரும் வரை வெளியில் வைத்து பிறகு ஒரு கனசதுர வடிவத்தில் சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும்.

பின் பேக்கிங் ட்ரேயை 180 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் ஓவனில் வைத்து 20 நிமிடங்கள் சமைக்க வேண்டும். அடுப்பில் ஓரு கடாயை வைத்து மிதமான சூட்டில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு மிதமான பதத்திற்கு வரும் வரை நன்றாக கொதிக்க விடவும். பிறகு ஓவனிலிருந்து ட்ரேயை எடுக்கவும், பேக்கிங் செய்யப்பட்ட கலவை தான் பக்லவா. இப்பொழுது காய்ச்சிய சர்க்கரை சிரப்பை பக்லவா மேல் ஊற்றி பரப்ப வேண்டும். பின் பக்லவா கேக் துண்டுகளை ட்ரேயில் இருந்து எடுத்து ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Milk cake baklava sweet recipe dessert