நாம் பாலோடு சில உணவுகளை சாப்பிடக்கூடாது. இந்நிலையில் அந்த வகையில் உள்ள உணவுகளை நாம் தெரிந்துகொள்ளலாம்.
குறிப்பாக பாலுடன் ஆரஞ்சு, கிரேப் பழங்கள், எலுமிச்சை ஆகியவற்றை நம் சேர்த்து சாப்பிடக்கூடாது. இந்நிலையில் பாலுடன் சேரும், இதன் அசிடிக் தன்மை, பாலை புளிக்க வைக்கும். இதனால் வயிற்று பிரச்சனை ஏற்படும். ஜீரண பிரச்சனைகள் ஏற்படலாம்.
இதுபோல மீன் வறுத்தது அல்லது குழம்பு வைத்த மீன்கள் பால் சேர்த்து சாப்பிடால் இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். அஜீரணம் ஏற்படலாம். மீன்களில் உள்ள என்சைம் பாலை கெட்டுப்போக வைக்க வாய்ப்பு உள்ளது.
இதுபோல மாமிசத்தை, பாலுடன் சாப்பிடாலும் அஜீரணம் ஏற்படும். அதிக புரத சத்து, பாலில் உள்ள லாக்டோஸ் உடன் ஒன்று சேர்ந்து ஜீரணிப்பதில் சிக்கல் ஏற்படுத்தும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“