வெயிலில் கருத்த சருமமா? மில்க் ஐஸ் க்யூப்ஸ் தரும் உடனடி பொலிவு

தினமும் சில நிமிடங்கள் ஒதுக்குவதன் மூலம் கோடைக்கால சருமப் பிரச்சனைகளில் இருந்து மட்டுமல்லாமல், பொதுவான சருமப் பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.

தினமும் சில நிமிடங்கள் ஒதுக்குவதன் மூலம் கோடைக்கால சருமப் பிரச்சனைகளில் இருந்து மட்டுமல்லாமல், பொதுவான சருமப் பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.

author-image
WebDesk
New Update
Milk skin care

Milk skin care

கோடை வெயில் கொளுத்தும் இந்த நாட்களில், வியர்வையும் வெப்பமும் நம் சருமத்தை அதிகம் பாதிக்கின்றன. வெயிலில் சென்று வந்தாலே சிலருக்கு சருமம் கருத்துப் போகலாம். தினமும் சில நிமிடங்கள் ஒதுக்குவதன் மூலம் கோடைக்கால சருமப் பிரச்சனைகளில் இருந்து மட்டுமல்லாமல், பொதுவான சருமப் பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.

Advertisment

ஐஸ் கியூப்ஸ் உடலுக்கு புத்துணர்ச்சி தருவதுடன், சருமத்திற்கும் எண்ணற்ற பலன்களை அள்ளித் தருகிறது.

பாலும் ஐஸ் கியூப்ஸும்

பால் சருமத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. இது ஒரு சிறந்த டோனராகவும், மாய்ஸ்சரைசராகவும் செயல்படுகிறது. மேலும், சருமத்தில் உள்ள நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களை மறைப்பதுடன், முகப்பரு தழும்புகளையும் குணப்படுத்த உதவுகிறது.

Advertisment
Advertisements

எப்படி செய்வது?

milk

ஒரு ஐஸ் ட்ரேயில் ¾ கப் பால் மற்றும் ¼ கப் தண்ணீர் ஊற்றவும். இந்த பால் கியூப்ஸை உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் மெதுவாகவும், சமமாகவும் தேய்த்து 30 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.

பலன்கள்

ஐஸ் கியூப்ஸ் உங்கள் சருமத்தை இறுக்கமாக்கி, வீங்கிய கண்களுக்கு சிகிச்சை அளிக்கிறது.

முகத்தில் எண்ணெய் உற்பத்தி மற்றும் சிவத்தல் வாய்ப்புகளை குறைக்கிறது.

முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது.

கருவளையங்களையும் நீக்குகிறது.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: