Advertisment

அவல், பால் சேர்த்த இனிப்பு கொழுக்கட்டை: தித்திப்பான ரெசிபி இங்கே

அவல் பால் கொழுக்கட்டை ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Sweet.jpg

சுவையான தித்திப்பான அவல் பால் கொழுக்கட்டை ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

அவல்- 1 கப் 
உப்பு- 1 டீஸ்பூன்
நெய்- 1 டீஸ்பூன்
பால்- 1 கப்
பாதாம் பவுடர்- சிறிதளவு 
வெல்லம்- அரை கப் 
ஏலக்காய் தூள்- சிறிதளவு 

செய்முறை

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அவல் மாவு போடவும். ( அவல் மாவு- அவலை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும்) . 1 ஸ்பூன் நெய் விட்டு சுடுதண்ணீர் ஊற்றி கலக்கவும்.  நன்றாக கெட்டியாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். பாலுடன், பாதாம் பவுடர் கலந்து மிதமான தீயில் கொதிக்க விடவும். வெல்லத்தை தூள் செய்து போட்டு கிளறி, ஏலக்காய் சேர்க்கவும். இப்போது உருண்டைகளை போட்டு மிதமான தீயில்  கிளறி இறக்கி, ஆறவிடவும். அவ்வளவு தான் பாலுடன் கொழுக்கட்டைகளை சேர்த்து சுவைக்கலாம். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment