Advertisment

பால், பன்னீர், தயிர்... ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான பொருள் எது தெரியுமா?

பால், பன்னீர் மற்றும் தயிர் ஆகிய அனைத்தும் ஊட்டசத்து நிறைந்தது தான். ஒவற்றில் உள்ள சத்துகள் அனைத்தும் பல விதமான உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கின்றன.

author-image
WebDesk
New Update
Milk, curd, paneer

பால் விரும்பிகளுக்கு, பால், பன்னீர் மற்றும் தயிர் ஆகியவற்றுக்கு இடையே தேர்வு செய்வது கடினமாக இருக்கும். ஆனால் உங்கள் ஊட்டச்சத்து தேவைகள், விருப்பத்தேர்வுகள் மற்றும் உணவுக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் எது உங்களுக்கு ஆரோக்கியமானது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதற்கான பதிலை இப்பதிவில் காணலாம்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Milk, paneer, or curd: The healthiest dairy product is…

 

"பால், பன்னீர் மற்றும் தயிர் ஆகியவை அவற்றின் ஊட்டச்சத்து விவரங்களின்படி ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன" என்று உணவியல் நிபுணரும் ஊட்டச்சத்து நிபுணருமான தன்வீ சிங் கூறியுள்ளார்..

பால்

பால் வலிமையான எலும்புகளை உருவாக்க உதவுகிறது. அதன் பொட்டாசிய உள்ளடக்கம் காரணமாக உயர் இரத்த அழுத்தத்தை சீரமைக்க உதவுகிறது. 

பாலில் உள்ள ஊட்டச்சத்து பண்புகள்

• சராசரியாக, 250 மில்லி கொழுப்பு இல்லாத பாலில் 90 கலோரிகள் மற்றும் 9 கிராம் புரதம் உள்ளது.
• ஒரு கப் கொழுப்பு இல்லாத பாலில் 8 சதவீதம் வைட்டமின் பி12 மற்றும் 2 சதவீதம் வைட்டமின் ஏ உள்ளது. மேலும் 12 சதவீதம் கால்சியம், 1 சதவீதம் சோடியம், 2 சதவீதம் மெக்னீசியம் மற்றும் 4 சதவீதம் பொட்டாசியம் உள்ளது.

பன்னீர்

அதிக புரத உள்ளடக்கம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன் பன்னீர் வலிமை மற்றும் ஊட்டச்சத்துக்கான ஆதாரமாக விளங்குகிறது.

பன்னீரின் ஊட்டச்சத்து பண்புகள்

கலோரிகள் 321
புரதம் 25 கிராம்
கொழுப்பு 25 கிராம்
கார்போஹைட்ரேட் 3.57 கிராம்

தயிர்

பாலுடன் ஒப்பிடும்போது தயிர் ஜீரணிக்க எளிதானது. "நல்ல பாக்டீரியாக்களால் நிரப்பப்பட்ட தயிர் செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்த உதவுகிறது மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்கிறது" என்று தன்வீசிங் தெரிவித்துள்ளார்.

தயிரில் உள்ள ஊட்டச்சத்துகள்

*ஒரு கப் கொழுப்பு இல்லாத தயிர் 98 கலோரிகளுக்கு மேல் மற்றும் 11 கிராம் புரதத்தைக் கொண்டிருக்கலாம்.
*ஒரு கப் கொழுப்பு இல்லாத தயிரில் பாலில் உள்ள அதே அளவு வைட்டமின்கள் உள்ளன, இதில் 8 சதவீதம் வைட்டமின் பி12 மற்றும் 2 சதவீதம் வைட்டமின் ஏ உள்ளது.
மற்ற பண்புகளை ஒப்பிடுகையில், கொழுப்பு இல்லாத தயிரில் 8 சதவீதம் கால்சியம், 15 சதவீதம் சோடியம், 2 சதவீதம் மெக்னீசியம் மற்றும் 2 சதவீதம் பொட்டாசியம் உள்ளது.

*எலும்பு ஆரோக்கியத்திற்கு - அதிக கால்சியம் மற்றும் வைட்டமின் டி இருப்பதால் பால் மற்றும் தயிர் சிறந்தது.

*வலுவான தசைகளுக்கு - பன்னீர் மற்றும் பால் நல்ல புரதத்தை அளிக்கின்றன.

*குடல் ஆரோக்கியத்திற்கு - தயிர் சிறந்த தேர்வாகும்.

நம் உடலுக்கு தேவையான சத்துகளை கண்டறிந்து, அவை நிறைந்து காணப்படும் உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு உதவும்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Benefits of eating paneer Benefits of having curd rice everyday
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment