இப்படி செய்தால் பால் பாயாசம் கட்டி ஆகாமல் அப்படியே ருசியாக இருக்கும். வெறும் 20 நிமிஷத்துல செய்து முடிக்கலாம்.
தேவையான பொருட்கள்
1 லிட்டர் பால்
சேமியா 70 கிராம்
கற்கண்டு அரை கப்
2 டீஸ்பூன் சர்க்கரை பொடித்தது
5 ஏலக்காய்
நெய் 2 டேபிள் ஸ்பூன்
மில்க் மெயிட் 50 கிராம்
பாதாம் பருப்பு 5
பிஸ்தா பருப்பு 5
திராட்ச்சை 2 ஸ்பூன்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நெய் சேர்க்க வேண்டும். தொடர்ந்து பிஸ்தா பருப்பு, பாதம் பருப்பு, திராச்சை சேர்த்து நன்றாக கிளர வேண்டும். நன்றாக வறுத்ததும். அதை தனியாக எடுத்து வைக்கவும். தொடர்ந்து அதில் இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்து சேமியா சேர்க்கவும். சேமியா நன்றாக சிவக்க வறுக்க வேண்டும். இதையும் தனியாக எடுத்து வைக்க வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பால் சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து பாலை நன்றாக கிளரவும். தொடர்ந்து அதில் வறுத்த சேமியாவை சேர்க்கவும். சேமியா நன்றாக வேக வேண்டும். 4 நிமிஷம் வரை காத்திரக்கவும். தொடர்ந்து அதில் கற்கண்டு சேர்க்கவும். கற்கண்டு கரைந்த பிறகு, மில்க் மெயிட் ஊற்ற வேண்டும். தொடர்ந்து நன்றாக கிளர வேண்டும். தொடர்ந்து பொடி செய்த சர்க்கரையை சேர்க்கவும். தொடர்ந்து ஏலக்காய் இடித்ததை சேர்க்கவும். தற்போது வறுத்த முந்திரி பருப்பு – திராச்சை சேர்க்கவும். கடைசியாக நெய்யை சேர்த்து கொள்ள வேண்டும். இப்படி செய்தால் பாயசம் கட்டி பிடிக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“