இந்தியாவில் மிகவும் பிரபலமான தானியங்களில் ஒன்று தினை. இந்தியாவில் பொதுவாக வளர்க்கப்படும் தினை வகைகள் முத்து தினை, பக்வீட், அமராந்த் போன்றவை ஆகும். இந்தியாவில் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதேபோல் உடல் பருமன் பிரச்சனை, கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்களும் எண்ணிக்கையில் மிக அதிகம்.
அவர்களுக்கு ஏற்ற உணவான தினை குறித்து சற்றி விரிவாக பார்ப்போம்.
இந்தியாவில் விளையக் கூடிய தினை மிகவும் பிரபலமானதாகும். அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. சில பிரபலமான தினை வகைகள் பின்வருமாறு:
முத்து தினை (பஜ்ரா), அமரன்த் (ராஜ்கீரா), ஃபிங்கர் மில்லட் (ராகி), சோர்கம் (ஜோவர்), ப்ரோசோ தினை (செனா), பக்வீட் (குட்டு), பர்ன்யார்டு (சன்வா), கோடு, ஃபாக்ஸ்டெயில் மில்லட் (கங்க்னி), லிட்டில் மில்லெட் (சமா).
தினை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
தினையின் பலன்களை பார்ப்போம்.
நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும்: இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பது அனைவருக்கும் சவால் நிறைந்த ஒன்றாகும். மருந்துகளின் விரிவான பட்டியலுடன், உணவில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நிச்சயமாக வெறுப்பை ஏற்படுத்தும். நீரிழிவு நோய்க்கு உகந்த தானியத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், தினை உங்களுக்கான சரியான தேர்வாகும். இந்த பிரபலமான தானியத்தில் கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) குறைவாக உள்ளது மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது, இது சரியான நீரிழிவு உணவாக அமைகிறது.
உடல் எடை பராமரிப்புக்கு உதவுகிறது: தினை நார்ச்சத்து, புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் மூலங்களை கொண்டுள்ளது.. இவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். இது தினையை எடை இழப்புக்கு உகந்ததாக மாற்றுகிறது. மேலும், தினை நிச்சயமாக வெள்ளை அரிசிக்கு ஆரோக்கியமான மாற்றாக இருக்கும்.
இது கொலஸ்ட்ராலை நிர்வகிக்க உதவும்: தினை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவாகும். கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் தினையின் நன்மைகளை ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த தானியமானது கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகள் எனப்படும் எல்டிஎல்லைக் குறைக்கவும், நல்ல கொலஸ்ட்ரால் அளவுகள் எனப்படும் எச்டிஎல்லை அதிகரிக்கவும் உதவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil