Advertisment

சத்தான வரகரிசி கஞ்சி: சிம்பிள் செய்முறை

வரகரிசி கஞ்சி உணவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களை சேர்க்க உதவுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
millet porridge, kodo millet, millet porridge benefits, varagu rice kanji, varagu arisi kanji, varagu rice kanji tamil recip, வரகு அரிசி நன்மைகள், வரகு அரிசி கஞ்சி, கஞ்சி வகைகள், சாமை அரிசி உணவுகள், வரகரிசி கஞ்சி செய்வது எப்படி, kodo millet, little millet porridge

Varagu rice kanji recipe: உலகின் பல பகுதிகளிலும் கஞ்சி பிரதான உணவாக இருந்து வருகிறது. அதிலும் வரகரிசி கஞ்சி என்றால் அதன் சுவையே தனிதான். அது மட்டுமல்லாமல் வரகரிசி கஞ்சி மிகவும் சத்தான உணவாகவும் இருக்கிறது.

Advertisment

காலை உணவாக கஞ்சி சாப்பிடுவது என்பது உலகின் பல பகுதிகளிலும் முக்கிய உணவாக இருந்து வருகிறது. 2010-க்கு பிறகு, சிறுதானிய உணவு பற்றிய ஆர்வம் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. வரகரிசி, திணை, சாமை போன்ற சிறுதானியங்கள் பயிர் செய்வதும் அதிகரித்துள்ளது. வரகு, திணை, சாமை போன்ற சிறு தாணிய அரிசிகளில் நல்ல சத்துக்கள் உள்ளன. வரகரிசியில் வைட்டமின் ஏ, பி, பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், இரும்பு மற்றும் பல ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன.

பொதுவாக கஞ்சி சாப்பிடுவதற்கு வழக்கமாக பயன்படுத்தப்படும் ஓட்ஸுக்கு பதிலாக கோடோ தினை அல்லது வரகரிசி சேர்ப்பது உணவை நார்ச்சத்து நிறைந்ததாக ஆக்குகிறது. வரகரிசி கஞ்சி உணவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களை சேர்க்க உதவுகிறது.

வரகரிசி மற்றும் தினை கஞ்சியில் கலோரிகள் மிகக் குறைவு. மேலும், அது சீரான உணவாகவும் இருக்கிறது. வரகரிசியில் உறுதியான நார்ச்சத்து உள்ளது. , ‘ப்ரீபயாடிக்’ என்றும் அழைக்கப்படுகிறது, இது பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என்று அறியப்படுகிறது. இது செரிமான அமைப்பில் நல்ல பாக்டீரியாக்களை ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல் குடல் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது.

வரகரிசி கஞ்சியை செஃப் அனஹிதா தோண்டி பரிந்துரைக்கிறார். அதோடு, வரகரிசி கஞ்சி செய்ய விரும்புபவர்களுக்காக வரகரிசி கஞ்சி செய்வது எப்படி என செய்முறையையும் பகிர்ந்துள்ளார்.

வரகரிசி கஞ்சி செய்ய தேவையான பொருட்கள்:

1 கப் வேகவைத்த வரகரிசி

1 கப் காய்ச்சிய பால்

3 டேபிள்ஸ்பூன் சர்க்கரை

3 டேபிள்ஸ்பூன் தண்ணீர்

2 டீஸ்பூன் நெய்

10-15 பாதாம் பருப்புகள்

10-15 திராட்சைகள்

செய்முறை:

  • ஒரு பாத்திரத்டில் நெய் சேர்த்து பாதாம் பருப்புகளை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இது நன்றாகவும் சுவையாகவும் இருக்கும்.
  • அதே பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, ஒரு கொதிக்க வைத்து அதனுடன் வேகவைத்த வரகரிசியை சேர்க்கவும்.
  • நன்றாக கலந்ததும், பால் சேர்த்து கெட்டியாகுமாறு செய்யுங்கள்.
  • பின்னர், ஒரு பாத்திரத்தில் ஊற்றி பாதாம் பருப்புகளை சேர்த்து வரகரிசி கஞ்சியை சாப்பிட்டு மகிழுங்கள்.

குறிப்பு: அதிக சர்க்கரையைச் சேர்த்து, ஆரோக்கியமான கஞ்சியாக சாப்பிடலாம் என்று அனஹிதா தோண்டி கூறுகிறார்.

Food Recipes Food Tamil Food Recipe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment