சத்து நிறைந்த கம்பு பாலக் கீரை ரொட்டி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கம்பு மாவு – 1 கப்
பாலக் கீரை – 70 கிராம்
உப்பு – தேவையான அளவு
நெய் அல்லது எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
முதலில் பாலக் கீரையை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர், கம்பு மாவில் எண்ணெய் 10 மில்லி கிராம் எடுத்து ஊற்றி சிறிது உப்பு மற்றும் நறுக்கி வைத்துள்ள கீரையையும் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு போல் பிசையவும்.
பின்னர், சிறு சிறு உருண்டையாக தயார் செய்ய வேண்டும். அடுத்து அடுப்பில் தோசைக் கல் வைத்து சப்பாத்தி போல் கையால் தட்டிப்போட்டு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி இரு புறமும் வேக வைத்து எடுத்தால் சத்தான கம்பு பாலக் கீரை ரொட்டி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“