குதிரைவாலி, வாழைப்பூவில் அடை செய்வதால், உடல் எடை குறைய உதவும். மிகவும் ஆரோக்கியமான ரெசிபி.
தேவையான பொருட்கள்
1 கை பிடி அளவு வாழைப் பூ
1 கப் குதிரைவாலி
2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
2 டேபிள் ஸ்பூன் பாசி பருப்பு
2 டேபிள் ஸ்பூன் இட்லி அரிசி
½ டேபிள் ஸ்பூன் சீரகம்
4 வத்தல்
கால் கப் தேங்காய்
2 ஸ்பூன் கேரட் நறுக்கியது
3 ஸ்பூன் வெங்காயம் நறுக்கியது
1 கை பிடி முருங்கைக் கீரை
கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
கொஞ்சம் பெருங்காயம்
உப்பு தேவையான
செய்முறை: ஒரு பாத்திரத்தில் குதிரைவாலி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு, இட்லி அரிசி , சீரகம், வத்தல், தண்ணீர் சேர்த்து 5 மணி நேரம் ஊற வைக்கவும். தொடர்ந்து இதை அரைத்துகொள்ளவும். அதில் தேங்காய் துருவல், கேரட், வேங்காயம், வாழைப்பூவை அரைத்து சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து முருங்கை கீரை, மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்து கொள்ளவும். உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து தோசைக் கல்லில் அடை ஊற்றி, எண்ணெய் ஊற்றி சேர்த்து சுட்டு எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil