புத்திசாலித்தனம் சும்மா வராது... இந்த உணவை சாப்பிடுங்க!

Mind diet : இதய நோய் அபாயத்தை குறைப்பதறகாக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், குறைந்த அளவு கொழுப்புள்ள மாமிசம் ஆகியவற்றை உட்கொள்வது. இந்த டயட்டில்...

Dementia மற்றும் குறிப்பிட்ட வயதுக்கு மேல் ஏற்படும் மூளை செயல்பாடு இழப்பு ஆகியவற்றை தடுப்பதே இந்த டயட்டின் நோக்கம். இது மத்திய தரை கடல் (Mediterranean) டயட் மற்றும் DASH டயட் ஆகியவற்றின் சேர்க்கையாகும்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

மத்திய தரைக்கடல் டயட், தாவர அடிப்படையிலானது மற்றும் வைட்டமின் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதை உள்ளடக்கியது. கடல் உணவுகள், புதிய விளைபொருள்கள், முழு தானியங்கள், கொட்டைகள் மற்றும் விதைகளை பெரிதும் சார்ந்துள்ளது. சமீபத்தில் Alzheimer’s and Dementia Journal என்ற ஆய்வு நூலில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின் படி இந்த வகை உணவு Alzheimer’s அதிக மரபணு ஆபத்து உள்ளவர்களுக்கு பயனளிக்கிறது.

DASH டயர் அல்லது உயர் இரத்த அழுத்தத்தை நிறுத்த உணவு அணுகுமுறைகள் என்பது இதய நோய் அபாயத்தை குறைப்பதறகாக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், குறைந்த அளவு கொழுப்புள்ள மாமிசம் ஆகியவற்றை உட்கொள்வது. இந்த டயட்டில் red meat, உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு ஆகியவை குறைந்த அளவிலேயே இருக்கும்.
ஆராய்ச்சியாளர்கள் உணவின் இந்த இரண்டு வடிவங்களையும் இணைத்து MIND டயட்டை வடிவமைத்துள்ளனர்.
MIND டயட்டில் என்ன உணவுகளை உட்கொள்வது

 

MIND டயட் பரிந்துரைக்கும் 10 உணவுகள் பின்வருமாறு

* வாரத்துக்கு 6 நாட்கள் பச்சை இலை காய்கறிகள்.
* குறைந்தது வாரத்துக்கு ஒரு நாளாவது பச்சை இலை காய்கறிகளுடன் மற்ற காய்கறிகள்.
* குறைந்தது வாரத்துக்கு இரண்டு முறை antioxidant நன்மைகள் உள்ள பழங்கள்.
* கொட்டைகள் (Nuts)
* உணவு சமைக்க ஆலிவ் எண்ணெய்.
* முழு கோதுமை அல்லது பழுப்பு அரிசி, oatmeal, quinoa போன்ற முழு தானியங்கள்
* சோயா பீன்ஸ், அவரை பயிறு போன்ற பீன்ஸ் வகைகள் வாரத்துக்கு 4 நாட்களுக்கு.
* கோழி இறைச்சி (வருக்காதது) வாரத்துக்கு 2 தடவை.
* ஒரு முறைக்கு ஒரு கப்புக்கு மேல் இல்லாமல் Red wine அருந்தலாம்.
MIND டயட்டில் உள்ள 5 ஆரோக்கியமற்ற உணவு வகைகள் red meats, வெண்ணெய், பாலாடைக் கட்டி, பேஸ்ட்ரிகள் மற்றும் இனிப்புகள் மற்றும் வருத்த அல்லது துரித உணவுகள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close