தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகியது. திருச்சி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 131 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. அந்த தேர்வில் 16,864 மாணவிகள் 14716 மாணவர்கள் என மொத்தம் 31580மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
131 தேர்வு மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனித் தேர்வர்களுக்கு 14 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 549 பேர் தனித்தேவர்களாக 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர்.
பொது தேர்வை கண்காணிப்பதற்காக 230 பறக்கும் படையினர் பணியமற்றப்பட்டுள்ளனர்.
தேர்வு அறைக்கு செல்வதற்கு முன்பாக மாணவிகள் தேர்விற்கு தயாராகினர். குறிப்பாக தாங்கள் ஏற்கனவே படித்த பாடத்தை மீண்டும் நினைவு கூர்ந்தனர்.
மாணவிகளுக்கு ஆசிரியர்களும் வழிகாட்டல்களை வழங்கினர். தொடர்ந்து தேர்வு அறைக்கு சென்ற மாணவர்களுக்கு 10 மணிக்கு வினாத்தாளும் 10.15 க்கு விடைகள் எழுதும் தாளும் வழங்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்.
முன்னதாக, தமிழக முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாகை வந்திருந்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று காலை மாணவர்களை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதவுள்ள மாணவர்களைச் சந்தித்து ஊக்கமளித்தார். பயம் இன்றி தேர்வு எழுதுமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்பள்ளி தேர்வு மையமாக செயல்படுவதால் அருகாமையிலுள்ள பள்ளி மாணவர்கள் சிறப்பு பேருந்தில் அழைத்து வரப்பட்டார்கள்.
அவர்களையும் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தார். “மாணவச் செல்வங்களே மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் தேர்வு எழுதுங்கள்.” என்று அப்போது அவர் அறிவுரை கூறினார்.
க.சண்முகவடிவேல்