திருச்சி மாவட்ட தி.மு.க சார்பில் சமத்துவ பொங்கல் விழா பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தி.மு.க முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என். நேரு மாட்டுவண்டியில் ஊர்வலமாக வந்து கலந்து கொண்டு பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் கொண்டாடினார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/13/pongal-kn-7.jpeg)
தமிழர் திருநாளான தை பொங்கலை வரவேற்கும் விதமாக திருச்சியில் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி சாஸ்திரி சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/01/13/pongal-kn-1.jpeg)
இந்த பொங்கல் விழாவில் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே. என்.நேரு கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/13/pongal-kn-5.jpeg)
இந்த பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், ஜெண்டை மேளம், தாரை தப்பட்டை என மேல தாளங்களுடன் கோலாகலமாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/01/13/pongal-kn-2.jpeg)
இந்த சமத்துவ பொங்கல் கொண்டாட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
/indian-express-tamil/media/media_files/2025/01/13/pongal-kn-3.jpeg)
இதைத்தொடர்ந்து, திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என்.நேரு கலந்துக்கொண்டு மாட்டு வண்டி ஓட்டி அசத்தினார். மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோரை மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ஒரு ரவுண்ட் வந்தார். திமுகவினரும், அரசு அதிகாரிகளும், கைத்தட்டி ஆரவாரம் செய்து அமைச்சரை உற்சாகப்படுத்தினர்.
செய்தி: க.சண்முகவடிவேல்