சுவையான கம கம புதினா குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையானவை
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
தக்காளி – 1
பூண்டு – 10 பற்கள்
சின்ன வெங்காயம் – 15
புதினா – 1 கைப்பிடி அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – சிறிதளவு
மல்லித்தூள் – 1 ½ டீஸ்பூன்
மிளகாய் தூள் – ½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
புளி – சிறிதளவு
செய்முறை
முதலில் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து வதக்கி சின்ன வெங்காயத்தை சேர்கவும். இரண்டும் வதங்கியதும் சீரகம், மிளகு, புதினா, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். இவை வதக்கியதும் நன்றாக ஆறவைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக, மீண்டும் கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இப்போது இதில் அரைத்து வைத்த புதினா கலவையை சேர்கவும். பின்னர் மஞ்சள் தூள் , மிளகாய்த் தூள், மல்லித்தூள் சேர்த்து கலக்கவும். கடைசியாக புளிக்கரைசலைச் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு கெட்டியாக வரும் போது அடுப்பில் இருந்து இறக்கவும். அவ்வளவு தான் புதுமையான கம கம புதினா குழம்பு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“