Advertisment

மழைக்கு இதமா.. புதினாவில் கம கம பக்கோடா; ரெசிபி இங்கே

புதினா பக்கோடா செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
food
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

புதினாவில் கம கம பக்கோடா செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

நறுக்கிய வெங்காயம்- 1/2 கப்
கடலை மாவு- 1 கப் 
அரிசி மாவு- 2 ஸ்பூன் 
ரவை- 2 ஸ்பூன் 
புதினா- தேவையான அளவு 
மிளகாய் தூள்- 1 ஸ்பூன் 
தனியா தூள்- 1 ஸ்பூன்  
பச்சை மிளகாய்- தேவையான அளவு 
கொத்தமல்லி இலைகள்-  தேவையான அளவு 
மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன் 
எள் விதைகள்- சிறிதளவு 
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை 

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து உளுந்தம் பருப்பு, அரிசி மாவு, ரவை, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து எப்போதும் பக்கோடா மாவு செய்யும் பதத்திற்கு பிசையவும். 

இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவை எடுத்து பக்கோடாவாக அப்படியே உதறி விடவும். எண்ணெய் கையில் படாமல் மெதுவாக செய்யவும். பக்கோடா பொன்னிறமாக மாறி வந்ததும் எடுத்து சூடாக பரிமாறலாம். அவ்வளவு தான் சுவையான புதினா பக்கோடா ரெடி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil 

Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment