புதினாவில் அட்டகாசமான புலாவ், இப்படி செய்யுங்க.
புதினா - ஒரு கட்டு
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகாய்வற்றல் - 3
பூண்டு - 2 பல்லு
இஞ்சி - 1 துண்டு
உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
தேங்காய் - 4 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயம், உப்பு - தேவையான அளவு
செய்முறை : புதினா, கொத்தமல்லி இலைகளை நன்றாக மண் போக அலசி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வாணலியில் எண்ணெய் விட்டு வெள்ளை உளுந்தம்பருப்பைச் சிவக்க வறுக்கவும்.
வறுத்த பருப்புடன் மிளகாய் வற்றல், பெருங்காயம், புளி, உப்பு, இஞ்சி, பூண்டு போட்டு வதக்கி அலசி வைத்துள்ள கொத்தமல்லி, புதினாவையும் சேர்த்து ஒரு சுற்று கிளறி விட்டு ஆற விடவும்..
மிக்சியில் ஆறவைத்தவற்றை போட்டு அதனுடன் தேங்காய், சீரகம் சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்த பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கவும் வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த கலவையை போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை நீர் வற்றும் வரை வதக்கி இறக்கவும்.
அடுத்து அதில் உடைத்த நிலக்கடலை அல்லது முந்திரிப்பருப்பையும் எண்ணெயில் வறுத்துக் கலக்கவும்.