/indian-express-tamil/media/media_files/2025/05/15/gC7m6zdDsMspxplGYS4A.jpg)
Miss World 2025 Telangana controversy
தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் அமைந்துள்ள 800 ஆண்டு பழமையான ராமப்பா கோவிலுக்கு மிஸ் வேர்ல்ட் 2025 போட்டியில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அழகிகள் வருகை தந்தது பாரம்பரியமும் கவர்ச்சியும் கலந்த ஒரு நிகழ்வாக அமைந்தது.
அவர்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தின்படி, ”தெலங்கானா சுற்றுலாத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அனுபவம், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான ராமப்பா கோவிலில் (ருத்ரேஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது) சம்பிரதாயப்பூர்வமான வரவேற்புடன் தொடங்கியது.
சிவப்பு கம்பளம் கோவிலின் நுழைவாயில் வரை விரிக்கப்பட்டிருந்தது. அங்கு வந்திருந்த விருந்தினர்கள், கண்கவர் வண்ணப் புடவைகளை அணிந்து, கூந்தலில் மல்லிகைப் பூக்களைச் சூடியிருந்தனர்.
கலாச்சார நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வந்திருந்த அவர்கள், காகதீய வம்சத்தின் கட்டிடக்கலை அற்புதங்களை பார்வையிட்டனர். பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழ்ந்தனர். மேலும், கோவிலின் 800 ஆண்டு கால வரலாற்றை விவரிக்கும் கண்கவர் ஒளி-ஒலி நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.
மாலையில், உள்ளூர் கலைஞர்களின் நிகழ்ச்சிகளால் பார்வையாளர்கள் கவரப்பட்டனர், இது கோவிலின் பிரமாண்டமான அமைப்பை ஒளிரச் செய்த கண்கவர் ஒளி நிகழ்ச்சியுடன் முடிவடைந்தது. தெலங்கானாவின் வளமான கலை பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில், அவர்கள் கைவினைப் பொருட்களால் செய்யப்பட்ட உள்ளூர் பரிசுகளைப் பெற்றனர்" என்றும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
பிடிஐ செய்தி நிறுவனத்தின்படி, "கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பு, போட்டியாளர்கள் அழகான தட்டுகளில் தண்ணீர் நிரப்பி பாதங்கள் கழுவும் வழக்கமான சடங்கில் பங்கேற்றனர்." இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்ட வீடியோ கிளிப்களில், பெண் தன்னார்வலர்கள் தண்ணீர் ஊற்ற, போட்டியாளர்கள் தங்கள் கால்களைக் கழுவுவதைக் காண முடிந்தது.
இருப்பினும், தன்னார்வலர்கள் தங்கள் கைகளால் போட்டியாளர்களின் கால்களைக் கழுவுவது போல் இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. இந்தச் செயல் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
முன்னாள் அமைச்சர் எஸ். நிரஞ்சன் ரெட்டி இதுகுறித்து தெலங்கானா டுடேவுக்கு அளித்த பேட்டியில், "இது சம்பந்தப்பட்ட பெண்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தெலங்கானா சமூகத்தின் கண்ணியத்திற்கும் செய்யும் அவமானம்" என்று கூறினார். விவசாயிகள் துயரத்திலும், தேசிய பாதுகாப்பு கவலைகள் நிறைந்திருக்கும் நிலையிலும் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் தவறான முன்னுரிமைகளை வழங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சமூக வலைத்தள பயனர்களும் இந்த சடங்கை விமர்சித்தனர்.
Volunteers were tasked with washing and wiping the feet of the contestants.
— Dilip kumar (@PDilip_kumar) May 15, 2025
The 72nd Miss World contestants during visits #RamappaTemple and #1000PillarTemple of 12th century in Telangana, washed their feet before entering, a common practice in #temple entry #rituals. pic.twitter.com/4vzu2s2w1g
இருப்பினும், பலர் இந்த நிகழ்வுகளுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தனர்.
"அவர்கள் வெறுமனே தண்ணீர் ஊற்றுகிறார்கள் என்பதை நான் தெளிவாகப் பார்க்கிறேன்... அவர்கள் கால்களைத் தொடவில்லை" என்று ஒரு பயனர் கூறினார். மற்றொருவர், "விருந்தினர்களின் கால்களைக் கழுவுவது காலனித்துவத்தின் எச்சம் அல்ல. அது கலாச்சாரத்தின் ஒரு பகுதி. கிருஷ்ணரே குசேலரின் கால்களைக் கழுவினார்" என்று எழுதினார்.
இந்திய கோவில் மரபுகளில் ஒருவரின் பாதங்களைக் கழுவுவதன் முக்கியத்துவம்
வரலாற்றாசிரியரும், கரோல் பள்ளி கவுகாத்தியின் நிறுவனருமான சாரு சுப்பா indianexpress.com இடம் கூறுகையில், "இந்திய ஆன்மீக மரபுகளில், ஒருவரின் பாதங்களைக் கழுவுவது, 'பாத ப்ரக்ஷாலனம்', ஆழ்ந்த மரியாதை மற்றும் பக்தியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பல இந்து சடங்குகளில், தெய்வங்களின் (சிலை வடிவில்), துறவிகளின், குருமார்களின் மற்றும் சில சமயங்களில் கௌரவ விருந்தினர்களின் பாதங்களைக் கழுவுவது வழக்கமாக உள்ளது.
இது பணிவு மற்றும் மரியாதையின் அடையாளமாக கருதப்படுகிறது. பாதங்கள் ஒரு தனிநபரின் உடல் மற்றும் அடையாளப் பயணத்தைக் கொண்டு செல்கின்றன என்ற நம்பிக்கையில் இந்த நடைமுறை வேரூன்றியுள்ளது. அவற்றைச் சுத்தம் செய்வது அந்தப் பயணத்தின் புனிதத்தை அங்கீகரிப்பதாகும்."
இந்தியாவில் பாதங்களைக் கழுவுவது இன்னும் பொதுவான நடைமுறையாக இருக்கும் சமூகங்களும் பிராந்தியங்களும்
ஆம், இந்தியாவில் பல பிராந்தியங்களில், குறிப்பாக வேத சடங்குகள், திருமணச் சடங்குகள், பூசாரிகளுக்கான பூஜை சடங்குகள் மற்றும் குரு பூர்ணிமா அனுசரிப்புகள் போன்ற சமயங்களில் பாதங்களைக் கழுவும் வழக்கம் இன்னும் உள்ளது. உதாரணமாக, சுப்பா குறிப்பிடுகிறார்:
தென்னிந்திய வீடுகளிலும் கோவில்களிலும், சுமங்கலி பிரார்த்தனை அல்லது கன்யா பூஜையின் போது, இளம் பெண்கள் அழைக்கப்பட்டு, அவர்கள் தேவியின் வடிவங்களாகக் கருதப்பட்டு அவர்களின் பாதங்கள் கழுவப்படுகின்றன.
வட இந்தியாவில், பித்ரு பக்ஷம் அல்லது மூதாதையர் சடங்குகளின் போது, பிராமணர்கள் அல்லது பெரியவர்களின் பாதங்கள் உணவு மற்றும் பரிசுகள் வழங்குவதற்கு முன்பு கழுவப்படுகின்றன.
கௌடிய வைஷ்ணவம் அல்லது பிற பக்தி மரபுகளில், சீடர்கள் குறிப்பிட்ட திருவிழாக்களின் போது தங்கள் குருமார்களின் பாதங்களை சம்பிரதாயமாக கழுவலாம்.
Read in English: ‘Disgusting activity’: Miss World 2025 contestants’ visit to Telangana temple sparks backlash over foot-washing clips; expert sheds light on this ritual
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.