/indian-express-tamil/media/media_files/2025/09/29/download-55-2025-09-29-16-06-45.jpg)
பலர் எதிர்காலச் செலவுகளை முழுமையாக கணக்கில் எடுக்க மாட்டார்கள். பணவீக்கம் மற்றும் சுகாதாரச் செலவுகளின் தாக்கத்தை பெரும்பாலும் கவனிக்க மறக்கின்றனர். இதனால், அவர்கள் ஓய்வூதிய காலத்தில் பெரும் சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. மனஅழுத்தமில்லா ஓய்வு நாட்களை அனுபவிக்க, இப்போது தான் சேமிக்கத் தொடங்குவது அவசியம். இதற்குள் தவிர்க்க வேண்டிய சில முக்கிய ஓய்வூதிய தவறுகளை நாம் தெரிந்து கொள்வோம்.
தாமதம்
சேமிப்பை ஆரம்பிக்கும் வேகம் தான் பணத்தை நீண்ட காலம் வளர்க்க உதவும் முக்கிய காரணமாகும். அதனால், சேமிப்பை தாமதிக்க கூடாது. தாமதமாக சேமிக்கத் தொடங்கினால், கூட்டு திட்டத்தின் நன்மைகள் பெரிதும் குறைய வாய்ப்பு உண்டு. ஆகவே, சம்பாதிக்கத் தொடங்கும் முதல் நாளிலிருந்தே எதிர்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவது மிக அவசியம். இதன் மூலம், ஓய்வூதிய நிதி காலப்போக்கில் விரைவாகவும், அதிகமாகவும் வளர்ந்து நன்மை தரும்.
முதலீடு
வங்கி கணக்கில் பணத்தை சேமிப்பதுதான் போதாது; பணத்தை நீண்ட காலத்திற்கு அதிகரிக்க முதலீடுகளில் ஈடுபடுவதும் அவசியம்.
பண வீக்கம்
பணவீக்கம் நமது சேமிப்பின் மதிப்பை குறைக்கும் என்பதால், பணவீக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் நமது முதலீடுகளை கவனமாக தேர்வு செய்து செய்ய வேண்டும்.
சுகாதார செலவுகள்
வயது கூடக்கூட சுகாதார செலவுகள் அதிகமாகும். இது நம் சேமிப்பை விரைவில் சிராய்த்து விடக்கூடும். குறிப்பாக ஓய்வு காலத்தில் மருத்துவச் செலவுகள் அதிகமாக இருக்கக்கூடியதால், உறுதியான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் தேவையானது.
முதலீடுகளில் சமநிலை
நாம் செய்யும் முதலீடுகளை காலத்தோடும் மாறும் தேவைகளுக்கேற்ப மதிப்பீடு செய்து, அவற்றை சரியான சமநிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. முதலீடுகளை பல்வேறு சொத்து வகைகளில் பிரித்து, பல்வேறு வருமான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். வருடாந்திர வருவாய் திட்டங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள், அல்லது வாடகை வருமானம் போன்ற வழிகள் மூலம் நிதி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
முதலீடுகளை திரும்ப பெறுவது
ஓய்வு காலத்தில் அனைத்து முதலீடுகளையும் ஒருசேர எடுத்துக்கொள்வதைவிட, தேவையான வருமானம் மற்றும் செலவுகளை பூர்த்தி செய்யும் வகையில் முதலீடுகளை திட்டமிட்டு பயன்படுத்துவது சிறந்தது.
நிதி இலக்குகள்
தக்க திட்டமிடல் இல்லாமல், நிதி இலக்குகள் குறைவுடன் ஓய்வு காலத்தை எதிர்கொள்வது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இது சேமிப்பு குறைவுக்குத் தள்ளி விடக்கூடும். எனவே, நிதி இலக்குகளை தெளிவாக வரையறுத்து, திட்டமிட்டு செயல்படுவது மிகவும் முக்கியம். இலக்குகளை சரியாக நிர்ணயிக்க, வாழ்நாள் நீட்சி, பணவீக்க விகிதம் மற்றும் எதிர்கால செலவுகள் ஆகியவற்றை கவனத்தில் எடுக்க வேண்டும். இதனால் நிதி பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
கடன்
ஓய்வு பெறும் முன் கடன்களை செலுத்தாமல் விட்டுவிடுவது, நம்முடைய நிதி சிக்கல்களை அதிகரிக்கக்கூடும். கடன் சுமையுடன் ஓய்வு வாழ்க்கையை தொடங்குவது பொருத்தமற்றது. எனவே, ஓய்வு எடுக்கும் முன்னதாகவே அனைத்து கடன்களையும் சீராக முடித்து வைப்பது, அமைதியான மற்றும் மனஅழுத்தமற்ற வாழ்க்கைக்கு வழிவகுக்கும். பாதுகாப்பான ஓய்வு காலத்தை மகிழ்வுடன் கழிக்க, கடன்களை தீர்த்து விடுவது மிகவும் முக்கியமானது.
இந்த தவறுகளை தவிர்ப்பது ஏன் அவசியம் தெரியுமா?
எதிர்காலத்தில் நிதி நிலைத்தன்மையும், மன அமைதியும் நிலைத்திருக்க, ஓய்வூதிய திட்டமிடலில் ஏற்படக்கூடிய தவறுகளை தவிர்ப்பது முக்கியமானது. விவேகமான முதலீடுகள் செய்தலும், சுகாதாரக் காப்பீடு போன்ற பாதுகாப்புகளை முன்கூட்டியே ஏற்பாடு செய்தலும், வாழ்கை முறையை சிறப்பாக பராமரித்தலும் மற்றும் திடீர் அவசரங்களைக் கையாளத் தேவையான ஏற்பாடுகளும் இதற்குப் பெரிதும் தேவையாகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.