/indian-express-tamil/media/media_files/2025/04/29/whSTIGHR4xuLlcaqAgOF.jpg)
மஞ்சளுடன் இந்த பொடியை தேன் கலந்து சாப்பிடுங்க… கெட்ட கொழுப்பு கரையும்; டாக்டர் நித்யா
நமது மோசமான ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் முக்கியமான ஒன்று கெட்ட கொலஸ்ட்ரால், உடலில் அதிகரிக்கும் கொலஸ்டராலின் காரணமாக மாரடைப்பு வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆரோக்கியமற்ற உணவுகளும், நமது ஆரோக்கியமற்ற நடத்தைகளும் தான் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக அமைகிறது. அதிகளவு கொலஸ்ட்ரால் இதயம் தொடர்பான பல உடல்நல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. ரத்தத்தில் காணப்படும் ஒருவகை மெழுகு பொருளான கொலஸ்ட்ரால் கெட்ட கொலஸ்ட்ராலாக மாறும்போது தான் நமது உடலுக்கு பல்வேறு விதமான பிரச்னைகள் ஏற்படுகிறது.
உடல் பருமன் அதிகமாக இருக்கக்கூடிய நபர்களுக்கு, சரியான எடை, உயரம் இருப்பவர்களுக்கும் கூட கொலஸ்ட்ரால் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். நம் உடலில் கொலஸ்டராலின் அளவு சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம். அதிகளவிலான கொலஸ்ட்ரால் இருப்பது மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்றவற்றை ஏற்படுத்த அதிகளவு வாய்ப்புகள் உள்ளது என்பதால் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீரிழிவு, புகைபிடித்தல் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆகியவையும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பிற்கு காரணமாகும்.
கொழுப்புச்சத்து உடலுக்கு மிக முக்கியமானது. தோல் பொலிவாக, சுருக்கங்கள் இல்லாமல் இருப்பதற்கு கொழுப்புச்சத்து மிக அவசியம். கொலஸ்ட்ரால் எண்ணிக்கையை பொறுத்துதான் உடல் ஆரோக்கியம் இருக்கு என்று சொல்லலாம். கொலஸ்ட்ரால் அதிகமாகும்போது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று எச்சரிக்கிறார் மருத்துவர் நித்யா.
கொலஸ்ட்ரால் அதிகரித்தால்...
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், இதய நோய், கல்லீரல், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்தான உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம். மாறாக, உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், இரத்தத்தில் இருந்து அதிகப்படியான கொழுப்பை அகற்ற உதவுகிறது மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கிறது. இளம் வயதிலேயே கொலஸ்ட்ரால் அளவு அறிந்து அதற்கேற்ற சிகிச்சை முறைகள் செய்யும்போது கொலஸ்ட்ரால் குறைய வாய்ப்பு உள்ளது.
கொலஸ்ட்ரால் அறிகுறிகள்:
மூச்சு வாங்குதல், உடலில் அதிகப்படியான வியர்வை, படபட இதயத்துடிப்பு, திடீர் உடல்பருமன் போன்றவை.
கொலஸ்ட்ரால் குறைக்க எளிய முறைகள்:
1.இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதில் மஞ்சள் முக்கியமானது. மஞ்சள், சீரகப்பொடி, சோம்பு பொடி கலந்து அதனுடன் தேன் சேர்த்து ஒரு நாளைக்கு 2 வேளை குடிக்க வேண்டும். இப்படி செய்வதால், சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் குணமாகும். உடலில் இருக்கக் கூடிய கொலஸ்ட்ரால் குறைய வாய்ப்புள்ளது.
2. மஞ்சனத்தி குடிநீர்: 5 மஞ்சணத்தி இலைகளை நீரில் கழுவி சுத்தம் செய்து, ஒன்றிரண்டாக நசுக்கி அரை லிட்டர் தண்ணிரீல் இட்டுக் காய்ச்சி குடிநீர் செய்து தினமும் காலை, மாலை வேளைகளில் 20 மி.லி. வீதம் சாப்பிட்டு வருவதால் கொலஸ்ட்ரால் அளவு, தலைவலி, மூச்சுப் பிரச்னை குறைய வாய்ப்புள்ளது என்கிறார் மருத்துவர் நித்யா.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.