/indian-express-tamil/media/media_files/2025/04/29/vc9BjApOu3wd1oR4Mmjx.jpg)
Mixer Grinder cleaning
இன்னைக்கு நம்ம எல்லார் வீட்டு கிச்சன்லயும் மிக்ஸி அத்தியாவசியமான ஒன்னா மாறிடுச்சு. அரைக்க, பொடிக்க, ஜூஸ் போட.. இப்படி எல்லாத்துக்கும் உதவுற மிக்ஸி, திடீர்னு ரிப்பேரானா அவ்ளோதான்! கிச்சன் வேலை எல்லாம் அப்படியே ஸ்டாப் ஆயிடும்.
உங்க மிக்ஸியில் படிந்திருக்கிற அழுக்குகளை ஈஸியா கிளீன் பண்றது எப்படினு இங்க பாருங்க
மிக்ஸிய எப்போதும் ஹைவோல்டேஜில இருக்கும் போதுதான் உபயோகிக்கணும். லோ வோல்டேஜில் இயக்கக் கூடாது. ஜார்ல3ல2 பங்கு போட்டு அரைக்கணும். அதிகமாகப் போட்டா மிக்ஸி சீக்கிரமே பழுதாகிடும். அதேபோல கெட்டியா மாவு அரைக்கக் கூடாது.
மிக்ஸி பிளேடு மழுங்கிட்டா கல் உப்பை ஒரு கையளவு எடுத்து மிக்ஸியில போட்டு ஓரிரு நிமிடங்கள் ஓட்டினால் பிளேடு கூர்மையாடும். சூடான பொருள்களை மிக்ஸியில அரைக்கிறதை தவிர்க்கவும். மிக்ஸி ஓடும்போது ஒரு கையால மூடியை அழுத்தமாகப் பிடிச்சுக்கணும். இந்த விஷயம் எல்லாம் ஃபாலோ பண்ணா உங்க மிக்ஸி நீங்க சொல்ற பேச்சு கேட்டு ரொம்ப நாள் உழைக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.