/indian-express-tamil/media/media_files/2025/05/01/dke0GbUxivNiB2I8E034.jpg)
Mixer Grinder Maintenance Tips
சமையலறையில் தினமும் சமைப்பவர்களுக்கு மிக்சி மற்றும் குக்கர் கைப்பிடிகள் கழன்று விழுவது ஒரு பொதுவான தொல்லை. ஒவ்வொரு முறை கைப்பிடி கழலும்போதும் அதனை சரிசெய்து சமைப்பது எரிச்சலூட்டும். சில சமயங்களில் புதிய மிக்ஸி அல்லது குக்கர் வாங்கிவிடலாமா என்ற எண்ணம் கூட தோன்றும். ஆனால், இனி அந்த கவலை வேண்டாம். ஒரு சிறிய பல் பூண்டு போதும், இந்த பிரச்சனையை எளிதாக சரிசெய்துவிடலாம்.
இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளபடி, கழன்ற மிக்ஸி அல்லது குக்கர் கைப்பிடியின் திருகாணியில் (நட்) பூண்டை நன்றாக தேய்க்கவும். பின்னர் அதனை வழக்கம்போல் டைட் செய்யவும். இப்போது கைப்பிடி மிகவும் இறுக்கமாக இருக்கும், இனிமேல் கழன்று வராது.
அடுத்த முறை உங்கள் சமையலறையில் இது போன்ற பிரச்சனை ஏற்பட்டால், இந்த எளிய மற்றும் பயனுள்ள குறிப்பை முயற்சி செய்து பாருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.